சேனா. இ-ள்: (323ல் காண்க) தெய். இ-ள்: மாதர் என்னும் சொல் காதல் என்னும் பொருள்படும், எ-று. உ-ம்: ‘மாதர் நோக்கு’ நச். இதுவுமது. இ-ள்: மாதர் காதல் மாதர் காதல் என்னும் குறிப்பினை யுணர்த்தும், எ-று. உ-ம்:‘மாதர் கொள் மானோக்கின் மட நல்லாய்’ (கலி56) எனவரும். வெள். இ-ள் : (சூ. 323ல் காண்க). ஆதி. பொருள்: மாதர் பெண்கள் காதலுறு, அழகிய. நம்பு, மே. |