யுறையும்’ (மலைபடு. 82) என்றக்கால், நயந்து உறையும் என்பதாம். சேனா. (சூ. 321, 322, 323ன் உரை) இ-ள்: ‘வம்புமாரி’ (குறுந். 66), ‘மாதர் நோக்கு’ (அகம் 130),‘நயந்து நாம் விட்ட நன்மொழி நம்பி’ (அகம். 198) 1பேரிசை நவிர மேஎ யுறையும்’ (மலைபடு 82) என வம்பும் மாதரும் நிலையின்மையும் காதலுமாகிய குறிப்புணர்த்தும்; நம்பும் மேவும் நசையாகிய குறிப்புணர்த்தும், எ-று. மே - நசையாக தெய். இ-ள் : நம்பு என்னும் சொல்லும் மேவு என்னும் சொல்லும் நசை என்பதன் பொருள்படும், எ-று. உ-ம் . ‘நயந்து நாம் விட்ட நன்மொழி நம்பி’ (அகம், 198 ) ‘பேரிசை நவிர மேஎ யுறையும்’ (மலைபடு. 82). நச்: இதுவுமது இ-ள் : நம்பும் மேவும் நசை ஆகும்மே நம்பும் மேவும் நசை என்னும் குறிப்பினை உணர்த்தும், எ-று. உ-ம் : ‘நயந்து நாம் விட்ட நன் மாழிநம்பி’ ( அகம்.. 198 ) எனவும், ‘பேரிசை நவிரம் மேஎய் உறையும் காரி யுண்டி’ (மலைபடு. 82 ) எனவும் வரும். வெள் (321, 322, 323 ன் உரை ) இ-ள் : வம்பு என்னும் உரிச்சொல் நிலையின்மை என்னும் குறிப்புணர்த்தும்; மாதர் என்னும் சொல் காதல் என்னும் குறிப்புணர்த்தும்; நம்பு, மேவு என்பன இரண்டும் நசை என்னும் குறிப்புணர்த்தும், எ-று.
1. பொருள் : பெரிய புகழையுடைய நவிரம் என்னும் மலையைப் பொருந்தியுறையும் |