சேனா இ-ள் : 1‘வேனிலுழந்த வறிதுயங் கோய் களிறு’ (கலி. 7), 2 ‘பாய்ந்தாய்ந்த தானைப் பரிந்தானா மைந்தினை’ (கலி. 96), ‘நிழத்த யானை மேய்புலம் படர’ (மதுரைக். 303), ‘கயலற லெதிரக் கடும்புனற் சாஅய்’ (நெடுநல். 18) என ஓய்தல் முதலாயின நுணுக்கமாகிய குறிப்புணர்த்தும், எறு, ஆய்ந்த தானை 3பொங்குதல் விசித்தலான் நுணுகிய தானை. உள்ளதென்றது முன்னுணுகா துள்ளது என்றவாறு. தெய் இ-ள் : ஓய்தல் என்னும் சொல்லும், ஆய்தல் என்னும் சொல்லும், நிழத்தல் என்னும் சொல்லும், சாஅய் என்னும் சொல்லும் ஆகிய அந்நான்கு சொல்லும் ஒரு பொருட்குள்ள அளவின் நுணுக்கத்தைக் காட்டும், எ-று. உ-ம் : ‘வேனிலுழந்த வறிதுயங்கு ஓய்களிறு’ (கலி. 7),‘பாய்ந்தாய்ந்த தானைப் பரிந்தானா மைந்தினை’ (கலி 96), ‘நிழத்த யானை மேய்புலம் படர (மதுரைக், 303), ‘கயலரு லெதிரக் கடும்புனற் சாஅய்’ (நெடுநல். 18). நச் இதுவுமது, இ-ள் : ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் என்னும் உரிச்சொல் முதனிலையாகிய அவ்விடத்து வந்த குறிப்புப் பெயர் நான்கும், உள்ளதன் நுணுக்கம் பண்டு உள்ளது ஒன்றனது நுணுகுதலை யுணர்த்தும், எ-று. 4சாய்தல் விகாரப்பட்டது.
1. பொருள் : முதுவேனிற் காலத்தால் வருந்தின உடல் சிறிதாக வருந்தும் ஓய்ந்த களிறுகள் 2. பொருள் : பரிந்து பாய்ந்து ஆய்ந்த தானை எனக் கூட்டுக.கரை நீங்கி விரிந்து நுணுகிய புடைவையுடை கெடாத வலியினையுடையாய். 3. பரந்து விரிவதை இறுக்கிக் கட்டுதலான் நுணுகிய (சுருங்கிய)தானை. 4. சாய்தல் என்பது சாஅய் என விகாரப்பட்டது என்பது கருத்து. |