71

உ-ம் :  ‘வேனி லுழந்த வறிதுயங் கோய்களிறு’
 ‘பாய்ந் தாய்ந்த தானைப் பரிந்தானா மைந்தினை’
 ‘நிழத்த யானை மேய்புலம் படர’
 ‘கயலற லெதிரக் கடும்புனற் சாஅய்’

என வரும்.

ஆய்ந்த தானை என்றது  1பொங்குதல் ஆவிதலான் நொசிந்த துகில்
என்றவாறு.

வெள்

இ-ள் :  ஓய்தல்  ஆய்தல்  நிழத்தல் சாஅய்  என்னும் அந்நான்கு
உரிச்சொற்களும்   முன்  நுணுகாது   உள்ளதன்  நுணுக்கம்  என்னும்
குறிப்புணர்த்தும், எ-று.

உ-ம் : ‘வேனிலுழந்த  வறிதுயங்  கோய்களிறு’  எனவும்,  ‘பாய்ந்
தாய்ந்த  தானைப்   பரிந்தானா  மைந்தினை, எனவும், ‘நிழத்த யானை
மேம்புலம்  படர’  எனவும்,  ‘கயலற  லெதிர்ந்த  கடும் புனல் சாஅய்’
எனவும்  ஓய்தல்  ஆய்தல்  நிழத்தல்  சாஅய் என்னும் உரிச்சொற்கள்
முன்  உள்ளதன்   நுணுக்கமாகிய  குறிப்புணர்த்தின. ஆய்ந்த  தானை
பொங்குதல் விசித்தலால் நுணுகிய ஆடை.

ஆதி

பொருள் : ஓய்-ஓய்வுறல்-இருந்த நிலையினும் சுருங்குதல்
             ஆய்-ஆய்தல்-இருந்த நிலையினும் சுருங்குதல்
             நிழ-நிழத்தல்-இருந்த நிலையினும் சுருங்குதல்
             சாய்-சாய்தல்-இருந்த நிலையினும் சுருங்குதல்

புலம்பு
 

325.

  புலம்பே தனிமை.                             (34)
 

ஆ. மொ. இல.

‘Pulambu’ means loneliness

ஆல்

‘Pulampu’ means loneliness.

இளம்

வ-று : ‘புலம்பு விட்டிருந்தார்’ (மலைபடு. 49) என்றக்கால், தனிமை 
துறந்திருந்தார் என்பதாம்.


1.பரத்தல் அடங்குதலான் நுணுகிய துகில்