சேனா இ-ள் : (325, 326, 327, 328 ஆகிய எண்களுள்ள சூத்திரங்களுக்குச் சேர்த்து 328ல் உரை காண்க) தெய் இ-ள் : புலம்பு என்னும் சொல் தனிமை என்னும் பொருள் படும், எ-று. உ-ம் :1 ‘புலிப்பற் கோத்த புலம்பு மணித் தாலி’ (அகம்5) நச் இதுவுமது இ-ள் : புலம்பே தனிமை புலம்பு தனிமை என்னும் குறிப்பு உணர்த்தும், எ-று. உ-ம் : ‘புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி’ (அகம். 5) என வரும். 2‘தமி’ என்பது சொற் புறனடையாற் கொள்க. வெள் இ-ள் :(325, 326, 327, 328 ஆகிய எண்களுள்ள சூத்திரங்களுக்குச் சேர்த்து 328ல் உரை காண்க) ஆதி பொருள் : புலம்பு-அழு-தனிமை. துவன்று |