உரியியல் சூ.9773

பி.இ.நூ.

நேமி. சொ. 59

......துவன்று நிறைவாகும்

இளம்.

வ-று : ‘ஆரியர் துவன்றிய பேரிசையியமம்’ (பதிற்று.11) என்றக்கால்,
நிறைந்த மூதூர் என்பதாம்.

சேனா.

இ-ள் : (சூ. 328ல் காண்க)

தெய் :

இ-ள் :துவன்று என்பது நிறைவு என்பதன் பொருள்படும், எ-று.

உ-ம் :‘ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்’         (நற். 170)

நச்.

இதுவுமது.

இ-ள் : துவன்று நிறைவு  ஆகும் துவன்று நிறைவு என்னும் குறிப்பு
உணர்த்தும், எ-று.

உ-ம் :‘ஆரியர் துவன்றிய  பேரிசை  யியமம்’  (பதிற்று.11)    என
வரும்.

வெள்

இ-ள் :(சூ. 328ல் காண்க)

ஆதி

பொருள் :துவன்று 1 சீக்கிரம் நிறைவான

முரஞ்சல்
    

327.

முரஞ்சன் முதிர்வே                            (36)

(முரஞ்சல் முதிர்வே)

ஆ.மொ. இல.

‘Muranjal’ means maturity

ஆல்.

‘Murancal’ means maturity


1.இப்பொருள் வழக்கில் இல்லை.