இளம் : வ-று : 1 ‘கோடு பல முரஞ்சிய கோளி யாலம்’ (மலைபடு. 263) என்றக்கால், முதிர்ந்த ஆலம் என்பதாம். சேனா இ-ள் : (சூ. 328ல் காண்க) தெய் இ-ள் : முரஞ்சல் என்னும் சொல் முதிர்வு என்னும் பொருள்படும், எ-று. உ-ம் : ‘கோடு பல முரஞ்சிய கோளி யாலம் (மலைபடு 268) நச் இதுவுமது. இ-ள் : முரஞ்சல் முதிர்வே முரஞ்சல் முதிர்வு என்னும் குறிப்பு உணர்த்தும், எ-று. உ-ம் : ‘கோடு பல முரஞ்சிய கோளி யாலத்து’ (மலைபடு. 268)என வரும். வெள் இ-ள் : (சூ. 328ல் காண்க) ஆதி பொருள் : முரஞ்சல் - ஒலித்தல் - முதிர்தல். வெம்மை |