இளம். வ-று : ‘நீ வெம்மையள்’ என்றக்கால், நீ வேண்டப்படுவாள் என்பதாம். சேனா (சூ. 325, 326, 327, 328ன் உரை.) இ-ள் : ‘புலிப்பற் கோத்த புலம்பு மணித்தாலி’ (அகம்.7) எனவும், ‘ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்’ (நற். 170) எனவும், 1 ‘சூல்முரஞ் செழிலி’ எனவும், ‘வெங்காமம் (அகம். 15) எனவும் புலம்பு முதலாயின தனிமையும் நிறைவும் முதிர்வுமாகிய குறிப்பும் விரும்புதலாகிய பண்பும் உணர்த்தும், எ-று. தெய். இ-ள்: வெம்மை என்னும் சொல் ‘வேண்டல்’ என்பதன் பொருள்படும், எ-று. உ-ம் :‘நீ வெய்யோ ளொடு’ (அகம். 6). நச். இது பண்பு. இ-ள் :வெம்மை வேண்டல் வெம்மை விரும்புதலாகிய பண்பை யுணர்த்தும், எ-று. உ-ம் : 2‘எம் வெங்காமம் இயைவ தாயினும்’ (அகம். 15) எனவரும். இது, 3 ‘குழைமாண் ஒள்ளிழை நீ வெய்யோளொடு’ எனத் திரிந்தும் நிற்கும். 4 வெம்மை வெப்பம் உணர்த்துதல் வழக்கு. வெள் (சூ. 325, 326, 327, 328ன் உரை). இ-ள் : புலம்பு என்னுஞ் சொல் தனிமை என்னும் குறிப்பு உணர்த்தும்; துவன்று என்னுஞ் சொல் நிறைவு என்னும் குறிப்பு
1. சூல் முரஞ்சு எழிலிசூல் முதிர்ந்த மேகம். வெம்காமம் விரும்பும் காமம். 2. பொருள் : எம்மால் விரும்பப்படும் காமம் நிறைவுறுவதாயினும். 3. பொருள் : காதணியையும் மாட்சிப்பட்ட அழகிய பிற அணிகளயும் உடைய நீ விரும்பியவளுடன். 4. பொருள் : வெம்மை என்னும் சொல் வெப்பம் எனும் பொருள் உணர்த்துதல் உலக வழக்கு. |