76தொல்காப்பியம் - உரைவளம்

உணர்த்தும்;   முரஞ்சல்  என்னுஞ்சொல்  முதிர்வு  என்னும்  குறிப்பு
உணர்த்தும்;  வெம்மை   என்னுஞ்  சொல்   விரும்புதலாகிய  பண்பு
உணர்த்தும்.

உ-ம் :‘புலிப்பற் கோத்த புலம்பு மணித் தாலி’ எனவும்,
‘ஆரியர் துவன்றிய பேரிசை யியமம்’ எனவும்,
‘சூல்முரஞ் செழிலி’ எனவும்,
‘எம் வெம்காமம்’ எனவும் வரும்.

ஆதி.

பொருள் : வெம்மை - வெப்பம் - வேண்டிய, விருப்பமான.

பொற்பு
 

329.

பொற்பே பொலிவு                             (38)
 

ஆ. மொ. இல.

‘Porpu means magnificence

ஆல்.

Porpu means beauty

இளம்

வ-று : ‘அணிகலம் பொற்ப’ என்றக்கால் பொலிய என்பதாம்.

சேனா

இ-ள் :(329,  330,  331 ஆம்  எண்கள் உள்ள சூத்திரங்களுக்குச்
சேர்த்து 331ல் உரை காண்க).

தெய்

இ-ள் :பொற்பு என்னுஞ் சொல் பொலிவு என்பதன் பொருள்படும்,
எ-று.

உ-ம் : ‘பெருவரை யடுக்கம் பொற்ப’                (நற். 34).

நச்.

இது குறிப்பு.

இ-ள் : பொற்பே     பொலிவு -  பொற்பு   பொலிவு   என்னும்
குறிப்புணர்த்தும் எ-று.

உ-ம் : ‘பெருவரை  யடுக்கம்  பொற்பச்  சூர்  மகள்’  (நற்.  34)
எனவரும்.