உரியியல் சூ.9977

வெள்.

இ-ள் : (329,  330,  331  ஆம்  எண்களுள்ள  சூத்திரங்களுக்குச்
சேர்த்து 331ல் உரை காண்க.

ஆதி.

பொருள் : பொற்பு - பொன் இயல் அழகு - பொலிவு.

வறிது
    

330.

வறிது சிறிதாகும்.                              (39)

(வறிது சிறிது ஆகும்)
  

ஆ. மொ. இல.

‘Vaŗithu’ means a little

ஆதி.

‘Vaŗitu means small

இளம்

வ-று  : ‘வறிது நெறி  யொரீஇ’ என்றக்கால்,  சிறிது நெறி  ஒரீஇ
என்பதாம்.

சேனா

இ-ள் : (சூ. 331ல் காண்க)

தெய்

இ-ள் :வறிது என்னுஞ்  சொல்  சிறிது என்பதன் பொருளாகும்,  எ-று.

உ-ம் :‘வறிது நெறி யொரீஇ’

நச்

இதுவுமது.

இ-ள் : வறிது  சிறிது  ஆகும் - வறிது  சிறிது  என்னும்  குறிப்பு
உணர்த்தும், எ-று.

உ-ம் :1‘வறிது வடக்கிறைஞ்சிய  சீர்சால்  வெள்ளி  (பதிற்று.  24)
எனவரும்.

வெள்.

இ-ள் : (சூ. 331ல் காண்க)

ஆதி.

பொருள் :வெறுமையான - சிறிய.


1. பொருள் : சிறிது  வடக்கே  தாழ்ந்த  சிறப்பமைந்த  வெள்ளிக்
               கோள்.