ஆ. மொ. இல. ‘Ēŗŗam’ means remembrance and determination. ஆல். Eŗŗam means remembering and determination. பி. இ. நூ. இல. வி. 2821 ஏற்றம் நினைவும் துணிவு இயம்பலும் இளம் வ-று : ‘ஏற்றத்திருந்தார்’ என்றக்கால்,நினைத்திருந்தார் என்பதூஉம், துணிந்திருந்தார் என்பதூஉம் ஆம். சேனா (சூ. 329, 330, 331ன் உரை) இ-ள் : ‘பெருவரை யடுக்கம் பொற்ப (நற். 34) எனவும், வறிது வடக்கிறைஞ்சிய’ (பதிற். 24) எனவும், ‘கானலஞ்சேர்ப்பன் கொடுமையேற்றி (குறுந். 145), ‘எற்றேற்ற மில்லாருள் யானேற்ற மில்லாதேன்’ எனவும், பொற்பு முதலாயின முறையானே பொலிவும், சிறிது என்பதூஉம், நினைவும் துணிவுமாகிய குறிப்பும் உணர்த்தும், எ-று. தெய் இ-ள் : ஏற்றம் என்னும் சொல் நினைவு துணிவு என்பவற்றின் பொருள்படும், எ-று. உ-ம் : ‘கானலஞ் சேர்ப்பன் கொடுமை யேற்றி’ (குறுந். 145) இது நினைவு. ஏற்றென் றிரங்குவ செய்யற்க’ (குறள்; 655) இது துணிவு. நச் இதுவுமது.
1. எற்ற நச். பாடம். |