79

இ-ள் :  எற்றம்  நினைவும்  துணிவும் ஆகும்  எற்றம்  நினைவும்
துணிவும் ஆகிய குறிப்பு உணர்த்தும், எ-று.

உ-ம் : ‘கானலஞ் சேர்ப்பன் கொடுமை யேற்றி’ (குறுந். 145)
   1
‘எற்றமி லாட்டியென் ஏமுற்றாள்’ (கலி. 144) எனவரும்.

வெள்

(சூ. 329, 330, 331ன் உரை)

இ-ள் : பொற்பு  என்னுஞ்   சொல்  பொலிவு   என்னும்  குறிப்பு
உணர்த்தும்;   வறிது     என்னுஞ்  சொல்  சிறிது  என்னும்  குறிப்பு
உணர்த்தும்;  ஏற்றம்  என்னும்   சொல்    நினைவும்   துணிவுமாகிய
குறிப்புணர்த்தும், எ-று.

உ-ம் :  ‘பெருவரை யடுக்கம் பொற்ப’ எனவும்,
 ‘வறிதுவடக் கிறைஞ்சிய’ எனவும்,
 ‘கானலஞ் சேர்ப்பன் கொடுமை யேற்றி’ எனவும்,
 ‘எற்றேற்ற மில்லாருள் யானேற்ற மில்லாதேன்’

எனவும்  பொற்பு   பொலிவு   என்னும்  குறிப்பிலும்,  வறிது   சிறிது
என்னும்    குறிப்பிலும்,  ஏற்றி-நினைந்து,   ஏற்றம்-துணிவு   என்னும்
குறிப்பிலும்   வந்தவாறு காண்க.

ஆதி.

பொருள் :ஏற்றம்-துலா, முன்னேற்றம்-நினைவு, துணிவு.

குறிப்பு : ஏற்றம், எற்றம் என்பன நினைவு துணிவு எனும் இரண்டு
பொருளுக்கும்     உரியவாக    வேறுபாடின்றி    ஆளப்பட்டுள்ளன.
நச்சினார்க்கினியர்  நீங்கலாக  மற்றையோர்  ஏற்றம்  என்ற  பாடமே
கொண்டனர்

பிணை,   பேண்
 

332.

பிணையும்   பேணும் பெட்பின் பொருள்           (41)
 

ஆ. மொ. இல.

‘Piņai’ and ‘Pēņ’ mean great desire and protection

ஆல்.

‘Piņai’ and Pēņ mean desire

பி. இ. நூ.

முத்து. ஒ. 41

பிணையும்   பேணும் பெட்பா கும்மே.


1. பொருள் : மனதில் துணிவில்லாதாள் என்னபித்தேறினாள்.