106

ஆல்

‘Ari’ means the beautiful

பி. இ. நூ.

நேமி. சொ. 58

அரி ஐம்மை

இளம்

வ-று : ‘அரிமயிர்த்  திரள்  முன்கை’  (புறம்.  11)  என்றக்கால்,  
1ஐம்மயிர்த் திரள் முன்கை என்றவாறாம்.

சேனா.

இ-ள் : (அடுத்த சூத்திரத்தில் இணைத்து எழுதப்பட்டுள்ளது).

தெய்

இ-ள் : அரி என்னுஞ்சொல் ஐது என்னும் பொருள்படும், எ-று.

உ-ம் : ‘அரிமயிர்த்திரள் முன்கை’ (புறம். 11)

நச்

இதுவுமது.

இ-ள் : அரியே ஐம்மைஅரி  ஐம்மையாகிய  குறிப்பு  உணர்த்தும்,
எ-று.

உ-ம் : ‘அரிமயிர்த்திரள்  முன்கை’   (புறம். 11)   என   வரும்.

வெள்

இ-ள் : (அடுத்த   சூத்திரத்தில்   இணைத்து  எழுதப்பட்டுள்ளது).

ஆதி

பொருள் - அரி - அரிசி, ரேகை - அழகான.

கவவு
 

351.

கவ வகத்திடுமே                               (60)

(கவவு அகத்திடுமே).
 

ஆ. மொ. இல.

‘Kavavu’ is having close to body or embracing;


1. ஐம்மை-நொய்மை, மென்மை.