ஓவா முயற்சி, ஒக்கல் போற்றல்,
மன்றிடை மகிழ்தல், ஒற்றுமை கோடல்,
திருந்திய அறத்திற் றீரா தொழுகல்,
விருந்துபுறந் தருதல் வேளாண் டுறையே’.
என்று ஓதப்பட்டன.
‘மன்னவன் என்ப தாசிரி யம்மே’.
‘வெண்பா முதலாம் நால்வகைப் பாவும்
எஞ்சா நாற்பால் வருணர்க் குரிய’.
என்றார் வாய்ப்பியம் உடையார் ஆகலின். இதனை விரித்து உரைத்துக்
கொள்க.
91) வஞ்சித் தாழிசையும் துறையும்
‘குறளடி நான்மையிற் கோவை மூன்றாய்
வருவன வஞ்சித் தாழிசை; தனிவரின்
துறையென மொழிப துணிந்திசி னோரே’.
‘இஃது என் நுதலிற்றோ?’ எனின், வஞ்சித் தாழிசையும் வஞ்சித்
துறையும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இதன் பொழிப்பு : இரு சீர் நான்காய் ஒரு பொருண்மேல் மூன்றாய்
வருவன வஞ்சித் தாழிசை; அச் செய்யுள் நான்கடியாய் ஒரு பொருண்மேல்
ஒன்றாய் வருவது வஞ்சித்துறை என்று நூற்றுணிவு உடையார் கூறுவார்
(என்றவாறு).
ஒரு பொருண்மேல் ஆகிய தொடர்ச்சி ஈண்டும் கோவைக் கிளவியாற்
கூறுபடுப்பது எனக் கொள்க.
‘தனிவரின்,
துறையென மொழிப துணிந்திசி னோரே’.
என்றாலும் கருதிய பொருளைக் கொண்டு நிற்கும்; ‘வருவன’ என்று
மற்றொரு வாய்பாட்டாற் சொல்ல வேண்டியது என்னை?
ஒரு பொருண்மேல் மூன்றாம் அடி மறி ஆகாதே வருவனவற்றை
‘வஞ்சி நிலைத் தாழிசை’ என்றும்; அடி மறியாய் வருவனவற்றை ‘வஞ்சி
மண்டிலத் தாழிசை’ என்றும்; ஒரு பொருண்மேல் ஒன்றாய் அடி மறி
ஆகாதே வருவனவற்றை ‘வஞ்சி நிலைத் துறை’ என்றும் அடி மறியாய்
வருவன
|