முகப்பு    

 கடம்பமரம் 


11
Song Not Found

உரை
 
12
12.வென்றிச் சிறப்பும் ஓலக்க வினோதச் சிறப்பும்

வயவர் வீழ வாள் அரில் மயக்கி,
இடம் கவர் கடும்பின் அரசு தலை பனிப்ப,
கடம்பு முதல் தடிந்த கடுஞ் சின வேந்தே!
தார் அணி எருத்தின் வாரல் வள் உகிர்
அரிமான் வழங்கும் சாரல், பிற மான்  
5
தோடு கொள் இன நிரை நெஞ்சு அதிர்ந்தாங்கு,
முரசு முழங்கு நெடு நகர் அரசு துயிலீயாது,
மாதிரம் பனிக்கும் மறம் வீங்கு பல் புகழ்
கேட்டற்கு இனிது  நின் செல்வம்: கேட்டொறும்
காண்டல் விருப்பொடு   கமழும் குளவி;  
10
வாடாப் பைம் மயிர், இளைய ஆடு நடை,
அண்ணல் மழ களிறு அரி ஞிமிறு ஓப்பும்
கன்று புணர் பிடிய; குன்று பல நீந்தி
வந்து அவண் இறுத்த இரும் பேர் ஒக்கல்
தொல் பசி உழந்த பழங்கண் வீழ,
15
எஃகு போழ்ந்து அறுத்த வால் நிணக் கொழுங் குறை,
மை ஊன் பெய்த வெண்னெல் வெண் சோறு,
நனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி;
நீர்ப் படு பருந்தின் இருஞ் சிறகு அன்ன,
நிலம் தின் சிதாஅர் களைந்த பின்றை,  
20
நூலாக் கலிங்கம் வால் அரைக் கொளீஇ;
வணர் இருங் கதுப்பின், வாங்கு அமை மென் தோள்,
வசை இல் மகளிர் வயங்குஇழை அணிய;
அமர்பு மெய் ஆர்த்த சுற்றமொடு
நுகர்தற்கு இனிது, நின் பெருங் கலி மகிழ்வே!  
25


துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணம்
தூக்கு:செந்தூக்கு
பெயர்:மறம் வீங்கு பல் புகழ்

உரை
 
17
17.பொறையுடைமையோடு படுத்து மன்னனின்
   வென்றிச் சிறப்புக் கூறுதல்

புரைவது நினைப்பின் புரைவதோ இன்றே
பெரிய தப்புநர் ஆயினும், பகைவர்
பணிந்து திறை பகரக் கொள்ளுநை ஆதலின்
துளங்கு பிசிர் உடைய, மாக் கடல் நீக்கி,
கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன் பணை,
5
ஆடுநர் பெயர்ந்து வந்து, அரும் பலி தூஉய்,
கடிப்புக் கண் உறூஉம் தொடித் தோள் இயவர்,
'அரணம் காணாது, மாதிரம் துழைஇய
நனந் தலைப் பைஞ் ஞிலம் வருக, இந் நிழல்' என,
ஞாயிறு புகன்ற, தீது தீர் சிறப்பின்,
10
அமிழ்து திகழ் கருவிய கண மழை தலைஇ,
கடுங் கால் கொட்கும் நன் பெரும் பரப்பின்,
விசும்பு தோய் வெண்குடை நுவலும்
பசும் பூண் மார்ப! பாடினி வேந்தே!

துறை:
செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணம
தூக்கு:
செந்தூக்கு
பெயர்:வலம்படு வியன் பணை

உரை
 
20
20.மன்னனது குணங்களைக் கூறி வாழ்த்துதல்

'நும் கோ யார்?' என வினவின், எம் கோ
இரு முந்நீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச் சென்று,
கடம்பு முதல் தடிந்த கடுஞ் சின முன்பின்,
நெடுஞ்சேரலாதன்; வாழ்க அவன் கண்ணி!
5
வாய்ப்பு அறியலனே, வெயில் துகள் அனைத்தும்,
மாற்றோர் தேஎத்து மாறிய வினையே;
கண்ணின் உவந்து, நெஞ்சு அவிழ்பு அறியா
நண்ணார் தேஎத்தும் பொய்ப்பு அறியலனே,
கனவினும்; ஒன்னார் தேய, ஓங்கி நடந்து,  
10
படியோர்த் தேய்த்து, வடி மணி இரட்டும்
கடாஅ யானைக் கண நிரை அலற,
வியல் இரும் பரப்பின் மா நிலம் கடந்து,
புலவர் ஏத்த, ஓங்கு புகழ் நிறீஇ,
விரிஉளை மாவும், களிறும், தேரும்,
15
வயிரியர், கண்ணுளர்க்கு ஓம்பாது வீசி,
கடி மிளை, குண்டு கிடங்கின்,
நெடு மதில், நிலை ஞாயில்,
அம்புடை ஆர் எயில் உள் அழித்து உண்ட
அடாஅ அடு புகை, அட்டு மலர் மார்பன்;
20
எமர்க்கும், பிறர்க்கும், யாவர்ஆயினும்,
பரிசில் மாக்கள் வல்லார்ஆயினும்,
கொடைக் கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்;
மன் உயிர் அழிய, யாண்டு பல மாறி,
தண் இயல் எழிலி தலையாது ஆயினும்,  
25
வயிறு பசி கூர ஈயலன்;
வயிறு மாசு லீஇயர், அவன் ஈன்ற தாயே!

துறை:இயல் மொழி வாழ்த்து
வண்ணம்:ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு:செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர்:அட்டு மலர் மார்பன்   

உரை
 
88
88.கொடைச் சிறப்பும் காம இன்பச் சிறப்பும் உடன்
   கூறி, வாழ்த்துதல்

வையகம் மலர்ந்த தொழில் முறை ஒழியாது,
கடவுள் பெயரிய கானமொடு கல் உயர்ந்து,
தெண் கடல் வளைஇய மலர் தலை உலகத்து,
தம் பெயர் போகிய ஒன்னார் தேய,
துளங்கு இருங் குட்டம் தொலைய, வேல் இட்டு;
            5

அணங்குடைக் கடம்பின் முழுமுதல் தடிந்து;
பொரு முரண் எய்திய கழுவுள் புறம் பெற்று;
நாம மன்னர் துணிய நூறி,
கால் வல் புரவி அண்டர் ஓட்டி,
சுடர் வீ வாகை நன்னற் தேய்த்து,
                       10

குருதி விதிர்த்த குவவுச் சோற்றுக் குன்றோடு
உரு கெழு மரபின் அயிரை பரைஇ,
வேந்தரும் வேளிரும் பின்வந்து பணிய,
கொற்றம் எய்திய பெரியோர் மருக!
வியல் உளை அரிமான் மறம் கெழு குருசில்!
              15

விரவுப் பணை முழங்கும், நிரை தோல் வரைப்பின்,
உரவுக் களிற்று வெல் கொடி நுடங்கும் பாசறை,
ஆர் எயில் அலைத்த கல் கால் கவணை
நார் அரி நறவின் கொங்கர் கோவே!
உடலுநர்த் தபுத்த பொலந் தேர்க் குருசில்!
                20

வளைகடல் முழவின் தொண்டியோர் பொருந!
நீ நீடு வாழிய, பெரும! நின்வயின்
துவைத்த தும்பை நனவுற்று வினவும்
மாற்று அருந் தெய்வத்துக் கூட்டம் முன்னிய
புனல் மலி பேரியாறு இழிதந்தாங்கு,
                     25

வருநர் வரையாச் செழும் பல் தாரம்
கொளக் கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப,
ஓவத்து அன்ன உரு கெழு நெடு நகர்,
பாவை அன்ன மகளிர் நாப்பண்,
புகன்ற மாண் பொறிப் பொலிந்த சாந்தமொடு
             30

தண் கமழ் கோதை சூடி, பூண் சுமந்து,
திருவில் குலைஇத் திருமணி புரையும்
உரு கெழு கருவிய பெரு மழை சேர்ந்து,
வேங்கை விரிந்து, விசும்புறு சேட்சிமை,
அருவி அரு வரை அன்ன மார்பின்
                    35

சேண் நாறு நல் இசைச் சேயிழை கணவ!
மாகம் சுடர மா விசும்பு உகக்கும்
ஞாயிறு போல விளங்குதி, பல் நாள்!
ஈங்குக் காண்கு வந்தனென், யானே
உறு கால் எடுத்த ஓங்கு வரல் புணரி                  
40

நுண் மணல் அடை கரை உடைதரும்
தண் கடல் படப்பை நாடு கிழவோயே!

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:கல் கால் கவணை

உரை
 

    மேல்