பல் யானைச் செல்கெழு குட்டுவன்  


மூன்றாம் பத்து - பதிகம்

இமையவரம்பன் தம்பி அமைவர
உம்பற்காட்டைத் தன் கோல் நிறீஇ,
அகப்பா எறிந்து, பகல் தீ வேட்டு,
மதி உறழ் மரபின் முதியரைத் தழீஇ,
கண் அகன் வைப்பின் மண் வகுத்து ஈத்து,

5
கருங் களிற்று யானைப் புணர் நிரை நீட்டி,
இரு கடல் நீரும் ஒரு பகல் ஆடி,
அயிரை பரைஇ, ஆற்றல் சால் முன்போடு
ஒடுங்கா நல்இசை, உயர்ந்த கேள்வி,
நெடும்பாரதாயனார் முந்துற, காடு போந்த  
10
பல் யானைச் செல்கெழு குட்டுவனைப்
பாலைக் கௌதமனார் பாடினார் பத்துப் பாட்டு.

அவைதாம்:
அடு நெய் ஆவுதி, கயிறு குறு முகவை, ததைந்த
காஞ்சி, சீர் சால் வெள்ளி, கான் உணங்கு கடு நெறி, காடு உறு
கடு நெறி, தொடர்ந்த குவளை, உருத்து வரு மலிர் நிறை, வெண்
கை மகளிர், புகன்ற ஆயம்: இவை பாட்டின் பதிகம்.
பாடிப் பெற்ற பரிசில்:'நீர் வேண்டியது கொண்மின்' என,
'யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும்' என,
பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு, ஒன்பது பெரு வேள்வி
வேட்பிக்க, பத்தாம் பெரு வேள்வியில் பார்ப்பானையும்
பார்ப்பனியையும் காணாராயினார்.
இமயவரம்பன் தம்பி பல் யானைச் செல் கெழு குட்டுவன்
இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.

உரை