21
தோழி கூற்று

‘பால் மருள் மருப்பின், உரல் புரை பாவு அடி,
ஈர் நறுங் கமழ் கடாஅத்து, இனம் பிரி ஒருத்தல்
ஆறு கடி கொள்ளும் வேறு புலம் படர்ந்து,
பொருள்வயிற் பிரிதல் வேண்டும்’ என்னும்
5அருள் இல் சொல்லும், நீ சொல்லினையே;
நன்னர் நறு நுதல் நயந்தனை நீவி,
நின்னின் பிரியலன், அஞ்சல் ஓம்பு’ என்னும்
நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே:
அவற்றுள் யாவோ வாயின? மாஅல் மகனே!
10‘கிழவர் இன்னோர்’ என்னாது, பொருள்தான்,
பழ வினை மருங்கின் பெயர்பு பெயர்பு உறையும்;
அன்ன பொருள்வயிற் பிரிவோய் நின் இன்று
இமைப்புவரை வாழாள் மடவோள்
அமைக் கவின் கொண்ட தோள் இணை மறந்தே

தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, அவனை நெருங்கி, களவுக் காலத்து ஒழுக்கம் எடுத்துக் காட்டலால் தெளிவுபட மொழிந்ததூஉம், பொருளது நிலையின்மையும்,அவளது ஆற்றாமையும், கூறிச் செலவு மறுத்தது