பக்கம் எண் :

பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதையென் நெஞ்சு.

 

(இதுவுமது)

என் நெஞ்சு- என் உள்ளமே! அவர் பிரிந்து நல்கார் என்று- அவர் இவ்வாற்றாமையை அறியாமையின் இரங்கி வந்து இன்பந் தரார் என்று கருதி, பிரிந்தவர் பின் ஏங்கிச் செல்வாய்- அதை அறிவித்தற்பொருட்டு நம்மைவிட்டுப் பிரிந்துபோனவர்பின் ஏக்கங்கொண்டு செல்கின்றாய்; பேதை நீ என்ன பேதையாயிருக்கின்றாய்!

ஆற்றாமையைக் கண்ணாரக் கண்டும் இரங்காது பிரிந்துபோனவர் இதைச் சென்றறிவித்தவுடன் திரும்பி வந்து இன்பந்தருவாரென்று கருதினமையின், 'பேதை' என்றாள்.