பற்று அற்றான் பற்றினைப் பற்றுக - எல்லாப் பொருள்களையும் பற்றி நின்றே இயல்பாகப் பற்றில்லாதவனாகிய இறைவனிடத்துப் பத்தி செய்வதை மனத்திற் கொள்க ; பற்று விடற்கு - விடாது தொடர்ந்து வரும் ஆசைப் பிணிப்பு முற்றும் நீங்குதற்கு ; அப்பற்றைப் பற்றுக - அவ்விறைவன் பத்தியையே ஊழ்க ஒன்றுகைகளால் ( தியான சமாதிகளால் ) இறுகக் கடைப்பிடிக்க. சார்ந்ததன் வண்ணமாதல் ஆதன் ( ஆன்மா ) இயல்பாதலால், பற்றற்றானைப் பற்றினவன் தானும் பற்றற்றானாவன் என்பது கருத்து. இதில் வந்துள்ளது சொற்பொருட் பின்வருநிலையணி. |