பக்கம் எண் :

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
யுறுப்போ ரனையரால் வேறு.

 

குறித்தது கூறாமைக் கொள்வாரோடு- ஒருவர் தம் மனத்திற் கருதியதை அவர் கூறாமலே அறியவல்லவரோடு; ஏனை உறுப்பு ஓர் அனையர்-மற்றவர் உறுப்பான் ஒரு தன்மையராக ஒப்பாரேனும்; வேறு-மதித்திறனாலும் அறிவாலும் வேறுபட்டவராவர்.

எனினும் (ஏனும்) என்பது அவாய் நிலையால் வந்தது. ஆறாம் அறிவில்லாத,மாக்கள் நிலையினர் என்னும் கருத்தால் 'வேறு' என்றார். 'ஆல்' அசைநிலை.