பக்கம் எண் :

அரம்பொருத பொன்போலத் தேயு முரம்பொரு
துட்பகை யுற்ற குடி.

 

உட்பகை யுற்ற குடி- உட்பகை யுண்டான குடி; அரம் பொருத பொன்போலப் பொருது உரம் தேயும் - அரத்தால் அராவப்பட்ட இரும்பு போல உட்பகையால் அராவப்பட்டு வலிமை குன்றும்.

பொருது என்னும் வினையெச்சம் தேயும் என்னும் வினைமுற்றுக் கொண்டு முடிந்தது.உட்பகை பொருதுதேயும் என்பது புலியடித்துச் செத்தான் என்பது போன்ற வழக்கு,குடி யுரந்தேயும் என்பதில் சினைவினை முதல் வினையாக நின்றது.இவ்விரு குறளாலும் ஒரு குடும்பம் அல்லது உறவுத்தொகுதி உட்பகையாற் கெடுவது கூறப்பட்டது.' பொன் ' இங்கு இனம்பற்றி இரும்பைக் குறித்தது.