முத்தி இலம்பகம் |
1728 |
|
|
(வி - ம்.) துளும்ப : தவத்தின் சுமையால் இளகலுமாம் என்பர் நச்சினார்க்கினியர்.
|
( 465 ) |
3064 |
நணிதினெண் வினையின் னவைகண் ணிறீஇத் | |
|
துணிய வீர்ந்திடுந் துப்பமை சிந்தையான் | |
|
மணியின் மேன்மணி கட்டிய தொத்ததற் | |
|
கணியு மாயலர் ஞாயிறு மாயினான். | |
|
|
(இ - ள்.) நணிதின் எண்வினை இன்னவை கண் நிறீஇ - அண்மையாக எண்வினையினுடைய குற்றங்களை முன்னர் நிறுத்தி; துணிய ஈர்ந்திடும் துப்பு அமை சிந்தையான் - அவற்றை அற்றுப்போம்படி, அறுத்திடும் தூய்மை பொருந்திய சிந்தையினனாய் (அதன்மேல் நின்றபோது); மணியின்மேல் மணி கட்டியது ஒத்து - நீலமணியின்மேல் மாணிக்கத்தை அழுத்தியது ஒத்து; அதற்கு அணியுமாய் அலர் ஞாயிறும் ஆயினான் - அதற்கு ஓர் அணியுமாய் இளஞாயிறும் ஆனான்.
|
(வி - ம்.) நணிதின் - அண்ணிதாக, எண்வினை - காதி அகாதி கர்மங்கள.் துப்பு - வலிமையுமாம். மணி - நீலமணி. இது மலைக்குவமை. மேன்மணி என்புழி மணி - மாணிக்கம், இது சீவகனுக்குவமை.
|
( 466 ) |
3065 |
குன்றின்வீ ழருவிக் குரல் கோடணைச் | |
|
சென்றெலாத் திசையுஞ் சிலம்பின் மிசை | |
|
நின்றனன் னிறை வம்மின் நீரென | |
|
வொன்றி நின்றதி ரும்மொரு பாலெலாம். | |
|
|
(இ - ள்.) குன்றின்வீழ் அருவிக் குரல் - அக்குன்றினின்றும் வீழும் அருவியின் குரல்; கோடு அணைச்சென்று - மரக்கோடுகளை அணைந்து சென்று; எலாத் திசையும் - எல்லாத்திசைகளினும்; சிலம்பின்மிசை இறை நின்றனன் - இக் குன்றின்மேற் சீவகன் நிற்கின்றனன், நீர் வம்மின் என - நீவிரும் வாருங்கோள் என்று; ஒரு பால் எலாம் ஒன்றி நின்று அதிரும் - ஒரு பக்கம் எல்லாம் பொருந்தி நின்று ஒலிக்கும்.
|
(வி - ம்.) கோடு : குன்றின் உச்சியுமாம்.
|
இது தற்குறிப்பேற்றவணி. எலாத் திசையும் - எல்லாத் திசையும். இச் சிலம்பின் மிசை என்க. இறை நின்றனன் என்க. இறை : சீவகன், குரல் அதிரும் என்க. கோடு - மலைச் சிகரமுமாம்.
|
( 467 ) |
3066 |
செம்பொன் பின்னிய போற்றினைக் காவலர் | |
|
வெம்பு மும்மத வேழம் விலக்குவார் | |
|
தம்புனத் தெறிமாமணி சந்து பாய்ந் | |
|
தும்பர் மீனெனத் தோன்றுமொர் பாலெலா | |
|
|