பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1729 

   (இ - ள்.) செம்பொன் பின்னியபோல் - பொற்கம்பி பின்னியதுபோல் உள்ள; தினைக்காவலர் - முற்றிய தினையின் காவலராய் நின்று; வெம்பும் மும்மத வேழம் விலக்குவார் - சீறும்மும் மதக் களிறுகளை ஒட்டுவார்; தம் புனத்து எறி மாமணி சந்து பாய்ந்து - தம் புனங்களிலே எறிந்த மாமணிகள் சந்தன மரங்களைத் தள்ளிப்போய்; உம்பர் மீன என ஓர் பால எலாம் தோன்றும் - விண்மீன் என ஒரு பக்கமெல்லாம் தோன்றும்.

3067 யானை குங்கும மாடி யருவரைத்
தேனெய் வார்சுனை யுண்டு திளைத்துடன்
கானமாப் பிடி கன்றொடு நாடக
மூனமின்றி நின் றாடுமொர் பாலெலாம்.

   (இ - ள்.) யானை குங்குமம் ஆடி - யானை குங்குமக் கொடியிலே கிடந்து; அருவரைத் தேன் நெய் வார்சுனை உண்டு - (பின்னர்) அரியமலையின் தேனொழுகிய சுனைநீரைக்குடித்து; திளைத்து - களித்து; உடன் கானம் மாப்பிடி கன்றொடு - அக்களிப்புடன் காட்டிலுள்ள பெரிய பிடியுடனும் கன்றொடும்; ஓர்பாலெல்லாம் ஊனம் இன்றி நின்று நாடகம் ஆடும் - ஒரு பக்கம் எல்லாம் குற்றம் இன்றி நின்று நாடகம் ஆடும்.

   (வி - ம்.) இது கட்டியானைக் குழாந்திரியும் அச்சந்தரும் காட்டினூடே தவஞ் செய்தமை குறித்தபடியாம். குங்குமம் -குங்குமக்கொடி, யானை பிடியொடும் கன்றொடும் நாடகம் ஆடும் என்க.

( 468 )
3068 வரியநாக மணிச் சுடர் மல்கிய
பொருவில் பொன்முழைப் போர்ப்புலிப் போதக
மரிய கின்னரர் பாட வமர்ந்துதம்
முருவந் தோன்ற வுறங்குமொர் பாலெலாம்.

   (இ - ள்.) வரிய நாகம் மணிச்சுடர் மல்கிய - வரியையுடைய நாகத்தின் மாணிக்க ஒளி நிறைந்த; பொரு இல் பொன் முழை - ஒப்பற்ற அழகிய குகையிலே; போர்ப் புலிப் போதகம் - போர்ப்புலியும் யானையும்; அரிய கின்னரர் அமர்ந்து பாட - அரிய கின்னரர்கள் அமர்ந்து பாட; தம் உருவம் தோன்ற ஓர் பாலெலாம் உறங்கும் - (அம் மணியின் ஒளியிலே) தம் உருவம் தெரிய ஒரு பக்கம் எல்லாம் உறங்கும்.

   (வி - ம்.) 'நாகத்தின் மணிச்சுடர்' என்றதனால் நாகமும் உறங்கும் எனக்கொள்க. புலியும் யானையும் ஒருங்கிருப்பினும் முனிவருறைவிட மாதலின் தீங்கின்றியிருந்தன.

( 470 )