பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1731 

   யாகிய திங்கள் நான்கும் என்க. இஃது இளவேனிலும் முதுவேனிலும் ஆகிய கோடைக்காலத்துச் சீவகன் றவநிலை கூறிற்று.

( 472 )
3071 பார்க்கடல் பருகி மேகம்
  பாம்பினம் பதைப்ப மின்னி
வார்ப்பிணி முரசி னார்த்து
  மண்பக விடித்து வான
நீர்த்திரள் பளிக்குத் தூணி
  சொரிந்திட நின்று வென்றான்.
மூர்த்தியாய் முனிவ ரேத்து
  முனிக்களி றனைய கோமான்.

   (இ - ள்.) மூர்த்தியாய் முனிவர் ஏத்தும் முனிக்களிறு அனைய கோமான் - தவவுருவினனாகி, முனிவர்கள் வாழ்த்தும் முனிக்களிறு போன்ற அரசன்; வானம் மேகம் பார்க்கடல் பருகி - வானிலே முகில் பாறையையுடைய கடலிலே நீரைப் பருகி; பாம்பு இனம் பதைப்ப மின்னி - பாம்பின் திரள் துடிக்க மின்னி; வார்ப்பிணி முரசின் ஆர்த்து - ஆர்ரால் இறுகிய முரசென முறுகி; மண்பக இடித்து - நிலம் பிளக்க இடித்து; நீர்த் திரள் பளிக்குத் தூணி சொரிந்திட நின்று வென்றான் - நீர்த்திரளைப் பளிங்குக் கோல் கிடக்குந் தூணி அதனைப் பெய்வது போலப் பெய்ய (ஆவணி முதலிய திங்கள் நான்கும்) நின்று வென்றான்.

   (வி - ம்.) இஃது ஆவணி புரட்டாதி ஐப்பசி கார்த்திகை யாகிய காரும் கூதிருமாகிய பருவத்துத் தவநிலை கூறுகின்றது. பார் - பறை, பாப்பினம் - பாம்பின் திரள். ”விரிநிற நாகம் விடருளதேனும் உருமின் கடுஞ்சினம் சேணின்று முட்கும்” ஆதலான் பாப்பினம் பதைப்ப என்றார். மேகம் நீர்த்திரளைப் பளிக்குத்தூணி பளிக்குக்கோலைச் சொரிவதுபோலச் சொரிய என்க. பக - பிளக்க. மூர்த்தி - தவவேடம்.

( 473 )
3072 திங்கணான் கவையு நீங்கத்
  திசைச்செல்வார் மடிந்து தேங்கொள்
பங்கயப் பகைவந் தென்னப்
  பனிவரை யுருவி வீசு
மங்குல்சூழ் வாடைக் கொல்கான்
  வெள்ளிடை வதிந்து மாதோ
விங்குநான் காய திங்க
  ளின்னுயி ரோம்பி னானே.

   (இ - ள்.) நான்கு திங்கள் அவையும் நீங்க - நான்கு திங்களாகிய காரும் கூதிரும் கழிந்த பிறகு; திசைச் செல்வார்.