முத்தி இலம்பகம் |
1732 |
|
|
மடிந்து - திசைதொறும் செல்கின்றவர் செல்லாமற் சோம்பியிருக்க; தேம் கொள் பங்கயப் பகை வந்தென்ன - அவ்விடங்களிலே கொண்ட பனி வந்ததாக, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடைக்கு ஒல்கான - பனி மலையைத் தடவி வரும் இருள் சூழும் வாடைக்குத் தளராதவனாய்; வெள்ளிடை வதிந்து - வெளியிடத்திலே தயங்கியிருந்து; இங்கு நான்கு ஆய திங்கள் இன உயிர் ஓம்பினான் - தங்கிய அந்நான்கு திங்களாகிய பனிக்காலத்திலே இனிய உயிரைக் காப்பாற்றினான்.
|
(வி - ம்.) முன்பனி, பின்பனி இரண்டுங் கூடிய பனிக்காலத் தவநிலை கூறினார். பங்கயப்பகை - பனி, இங்குதல் -தங்குதல்.
|
( 474 ) |
3073 |
வடிமலர் நெடுங்க ணாரு | |
|
மைந்தரும் வரவு பார்த்தங் | |
|
கடிமலர் பரவ வேறி | |
|
யாரமிர் தரிதிற் கொள்வான் | |
|
கடிமலர்க் கமலத் தன்ன | |
|
கையினை மறித்துக் கொள்ளான் | |
|
முடிதவக் கடலை நீந்தி | |
|
யின்னண முற்றி னானே. | |
|
(இ - ள்.) அங்கு வடிமலர் நெடுங்கணாரும் மைந்தரும் வரவு பார்த்து - அப்போது கூரிய மலரனைய நெடுங்கண் மங்கையரும் நந்தட்டன் முதலிய மைந்தர்களும் சரியைக்கு வரும் இவன் வரவைப் பார்த்து; ஏறி அடிமலர் பரவ - அவ் வரையில் ஏறி இவன் அடிமலரை வாழ்த் ; அரிதின் ஆர் அமிர்து கொள்வான் - அரிதாகச் சிறந்த உணவைக் கொள்கிறவன் (சிறிது கொண்டு); கடிமலர்க் கமலத்து அன்ன கையினை மறித்துக் கொள்ளான் - மணமலராகிய தாமரை போன்ற கையாலே விலக்கிக் கொள்ளாதவனாய்; முடி தவக்கடலை நீந்தி இன்னணம் முற்றினான் - வீடுபெறுதற்குரிய தவக் கடலைக் கடந்து இவ்வாறு அத்தவத்தை முடித்தான்.
|
(வி - ம்.) முடித்தல் - வீடுபெறுதல்.
|
நெடுங்கணார் என்றது காந்தருவதத்தை முதலிய மனைவிமாரை. மைந்தர் நந்தட்டன் முதலியோர். ஆரமிர்து - உணவு, கடிக்கமல மலரன்ன கை என்க. முடிதவம் : வினைத்தொகை.
|
( 475 ) |
3074 |
ஒளிறுதோ் ஞானம் பாய்மா | |
|
வின்னுயி ரோம்ப லோடைக் | |
|
களிறுநற் சிந்தை காலாள் | |
|
கருணையாங் கவசஞ் சீலம் | |
|
|