கார் மினொடு உலாயது என - மேகம் மின்னலொடு உலாவியது போல; நூல் கஞலும்மார்பன் - முப்புரி நூல் விளங்கும் மார்பையுடைய இராமபிரான்; நம் வாயில் -நமது வீட்டு வாயில் வழியாக; தேர்மிசை - தேரின்மேல்; கடிது ஏகுதல் செய்வானோ- வேகமாகக் கடந்து சென்றுவிடுவானோ?; கூர் கனக ராசியொடு - (அத்தேரைத்தடுப்பதற்காக) மிகுந்த பொற்குவியலோடு; கோடி மணியாலும் - அளவற்ற மனணிகளாலும்; நெடு வீதியினைத் தூர்மின் - பெரிய தெருவினை நிரப்புங்கள்; என்று சொரிவாரும் -என்று சொல்லிக்கொண்டு அவற்றைக் கொட்டுவாரும் சிலர். இராமன் வடிவழகைக் காண அவனது தேர் விரைந்து செல்லாதபடி பொன்னையும் மணியையும்வழியில் கொட்டும்படி சொல்லிச் சிலர் அவற்றைப் பொழிந்துவைத்தனர். கார் - இராமன்திருமார்பிற்கும், மின்னல் முப்புரி நூலுக்கும் உவமை. 100 1591. | ‘தாய் கையில் வளர்ந்திலன்; வளர்த்தது, தவத்தால் கேகயன் மடந்தை; கிளர் ஞாலம் இவன் ஆள, ஈகையில் உவந்த அவ் இயற்கை இது என்றால், தோகை அவள் பேர் உவகை சொல்லல் அரிது?’ என்பார். |
தாய் கையில் வளர்ந்திலன் - இராமபிரான் ஈன்ற தாயாகிய கோசலையின் கையில்வளர்ந்தானில்லை; வளர்ந்தது - அவனை வளர்த்தது; தவத்தால் கேகயன் மடந்தை -முன்செய்த தவப்பயனால் கேகயமன்னன் மகளாகிய கைகேயியை; கிளர் ஞாலம் இவன் ஆள -(அதனால்) விளங்குகின்ற நாட்டினை இவ் இராமன் ஆள; ஈகையில் உவந்த - கொடுப்பதில்(பெற்ற தாய்போல) மகிழ்ச்சியுற்ற; இயற்கை இது என்றால்- (அவளது) தன்மைஇதுவாயின்; தோகை அவள் பேர் உவகை - அக் கைகேயியினது பெருங்களிப்பு; சொல்லல்அரிது - சொல்லுதல் முடியாது; என்பார் - என்று கூறுவார்கள். இராமனை வளர்த்தவன் கைகேயியாதலின் அவளுக்கே மிக்க மகிழ்ச்சி உண்டு என்றனர்சிலர். அவள் இந்நாள் வரை இராமனிடம் பேர்புன் கொண்டவனாய் இருந்தமையை அனைவரும்அறிவராதலின் இவ்வாறு கூறினர். 101 1592. | ‘பாவமும் அருந் துயரும் வேர் பறியும்’ என்பார்; ‘பூவலயம் இன்று தனி அன்று; பொது’ என்பார்; ‘தேவர் பகை உள்ளன இவ் வள்ளல் தெறும்’ என்பார்; ‘ஏவல் செயும் மன்னர் தவம் யாவது கொல்?’ என்பார். |
|