| வீங்கு இருங் காதல் காட்டி, விரி அரி சுமந்த பீடத்து ஓங்கிய மகுடம் சூடி, உவகை வீற்றிருப்பக் காணான். |
ஆங்கு வந்து அடைந்த அண்ணல் - தயரதனின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தஇராமபிரான்; ஆசையின் கவரி வீச - திசைகள் தோறும் சாமரைகள் வீச; பூங் குழல்மகளிர் உள்ளம் - பூவை அணிந்துள்ள குழலையுடைய மங்கையர் மனம்; புதுக் களி ஆட - புதிய மகிழ்ச்சியால் ஆடவும்; வீங்கு இருங் காதல் காட்டி - மிகுந்த விருப்பத்தை (தன்வருகையில்) காட்டி; ஓங்கிய மகுடம் சூடி - சிறந்த கிரீடத்தை அணிந்த; அரசன் - தயரதன்; விரி அரி சுமந்த பீடத்து - விசாலமான சிங்கம் தாங்கும்ஆசனத்தில்; உவகை வீற்றிருப்பக் காணான் - மகிழ்வுடன் வீற்றிருக்கவும்கண்டானில்லை. மகளிர் உவகையால் ஆடுதலையும் தயரதன் காதல் காட்டி வீற்றிருத்தலையும் இராமன்காணவில்லை அரண்மனை பொலிவின்றி இருந்தது. என்றவாறு. ஆசை - திசை. வீற்றிருத்தல் -மற்றொருவர்க்கு இல்லாத சிறப்போடு விளங்கித் தோன்றுதல். 104 1595. | வேத்தவை, முனிவரோடு, விருப்பொடு களிக்கும் மெய்ம்மை ஏத்து அவை இசைக்கும், செம் பொன் மண்டபம் இனிதின் எய்தான், ஒத்து அவை, உலகத்து எங்கும் உள்ளவை, உணர்ந்தார் உள்ளம் பூத்தவை, வடிவை ஒப்பான், - சிற்றவை கோயில் புக்கான். |
ஒத்து அவை - மறைகளையும்; உலகத்து எங்கும் உள்ளவை - உலகு எங்கும்இருக்கும் அறிவு நூல்களையும்; உணர்ந்தார் உள்ளம் பூத்தவை - நன்கு உணர்ந்தஞானிகளின் நெஞ்சத்தில் தோன்றுவனவாகிய; இராமபிரான்; வேத்தவை - அரசர் கூட்டம்;முனிவரோடு - முனிவர்களுடனே கூடி; விருப்பொடு களிக்கும் - அன்புடன்மகிழ்கின்ற; மெய்ம்மை ஏத்து அவை இசைக்கும் - உண்மையான கீர்த்திகளைப் பாடுகின்ற; செம் பொன் மண்டபம் - சிறந்த பொன்னால் ஆகிய மண்டபத்தினுள்ளே; இனிதின் எய்தான் - இனிமையாகப் புகாதவனாகி; சிற்றவை கோயில் புக்கான் -சிறிய தாயாகிய கைகேயியினுடைய மாளிகையில் புகுந்தான். அரசரும் முனிவரும் தன் கீர்த்தியைப் பாடிக்கொண்டிருக்கும் விழாமண்டபத்தில் நுழையாமல்இராமன் கைகேயியின் மாளிகையில் புகுந்தான். உலகத்து |