‘பூண் ஆர் அணியும் - அணிதற்குப் பொருந்திய அணிகலன்களும்; பொன் ஆசனமும்- பொன்மயமான சிங்காதனமும்; குடையும் - வெண்கொற்றக் குடையும்; சேண் ஆர்மார்பும் - அகன்று பொருந்திய மார்பும்; திருவும் - அங்கே வீற்றிருக்கும்திருமகளும்; தெரியக் காணக் கடவேன் நான் - விளங்கப் பார்த்தற்குக் கடமைப்பட்ட யான்; மாணா மர வற்கலையும் - மாட்சிமை இல்லாத மரவுரியும்; மானின் தோலும் - மேனியில் போர்த்துக்கொள்ள மான் தோலும்; அவை - ஆகிய அவற்றை; காணாது ஒழிந்தேன் என்றால் - பாராமல் (விண்ணுலகு) சென்றுவிட்டேன் என்றால்; கருமம் நன்றுஆய்த்து அன்றோ? - என் செயல் நல்லதாக ஆய்விடும் அல்லவா? அரச கோலத்தைக் காணவேண்டிய நான் தவக்கோலம் காண நேர்ந்ததே; இதைக் காணாமல்போய்விட்டால் நல்லதல்லவா என்று புலம்பினான். ‘பூ மருவு நறுங்குஞ்சி புன்சடையாப் புனைந்து பூந்துகில்சேர் அல்குற், காமர் எழில் விழல் உடுத்துக் கலன் அணியாது அங்கங்கள் அழகுமாறி, ஏ மருதோள் என் புதல்வன் யான் இன்று செலத்தக்க வனம் தான் சேர்தல், தூமறையீர் இது தகவோ, சுமந்திரனே வசிட்டனே சொல்லீர் நீரே' என்ற குலசேகர ஆழ்வார் பாசுரம் (திவ்ய.735.) இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. தவம் செய்வோர் மரவுரி உடுத்து மான் தோல் போர்த்தல் மரபு. 65 மன்னனைத் தேற்றி வசிட்டன் சொல்லுதல் | 1671. | ஒன்றோடு ஒன்று ஒன்று ஒவ்வா உரை தந்து, அரசன், ‘உயிரும் சென்றான் இன்றோடு’ என்னும் தன்மை எய்தித் தேய்ந்தான், மென் தோல் மார்பின் முனிவன். ‘வேந்தே! அயரேல்; அவனை, இன்று ஏகாத வண்ணம் தகைவென் உலகோடு' என்னா. |
அரசன் - தயரத மன்னன்; ஒன்றோடு ஒன்று ஒன்று ஒவ்வா உரை தந்து -ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் புலம்பி; ‘உயிரும் இன்றோடு சென்றான்’ என்னும்தன்மை எய்தித் தேய்ந்தான் - உயிரும் இன்றோடு போகப் பெற்றான் என்கின்ற நிலைஅடைந்து அழிந்தான்; மேன் தோல் மார்பின் முனிவன் - மெல்லிய தோல் போர்த்திய மார்பினை உடைய வசிட்டன்; ‘வேந்தே - தசரத மன்னனே; அயரேல் -சோர்வடையாதே; அவனை - இராமனை; இன்று - இன்றைக்கு; ஏகாத வண்ணம் -காடு செல்லாதபடி; உலகோடு தகைவென்’ - நாட்டு மக்களோடு சேர்ந்து தடுப்பேன்; என்னா - என்று. தானே சென்று சொன்னால் இராமனைத் தடுத்தல் இயலாது என்பதால் ‘உலகோடு சென்றுதகைவென்’ என்றான். 66 |