பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 221

கலங்கி;  ‘அரசன் இறந்தான் கொல்லோ’  என்னா  இடர் உற்று
அழிவாள்
- அரசன் இறந்தான் போலும் என்று துன்பமுற்று வருந்தும்
கோசலை;’ மகன் முன்எனையும் துறந்தான்’ - மகனாகிய இராமனும்
முன்னால் என்னைக் கைவிட்டான்;  ‘நீயும்துறந்தாய்’ -  கணவனாகிய
நீயும் என்னைக் கைவிட்டாய்;  துணைவா! - என்துணைவனே!;  ஐயா! -
ஐயனே!;  அரசர்க்கு அரசே!  - இராச இராசனே!;  அறம்தான்
இதுவோ'  -
அறம்  என்பது  இதுதானோ;  என்றாள் -.

     தாயை மகன் துறப்பதும், மனைவியைக் கணவன் துறப்பதும்தான்
தருமமா? என்று வினாவிப்புலம்பினாள் - ‘கொல’ ஐயம், ‘ஓ’ வினாப்
பொருளில் வந்தது. ‘எனையும்’ என்பதிலுள்ள உம்மை‘மகன்’ என்பதனோடு
கூட்டிப் பொருள் கொள்ளப்பட்டது.                              68

1647.‘மெய்யின் மெய்யே! உலகின்
     வேந்தர்க்கு எல்லாம் வேந்தே!
உய்யும்வகை நின் உயிரை
     ஓம்பாது இங்ஙன் தேம்பில்,
வையம் முழுதும் துயரால்
     மறுகும்; முனிவனுடன் நம்
ஐயன் வரினும் வருமால்;
     அயரேல்; அரசே!' என்றாள்.

     ‘மெய்யின் மெய்யே! - சத்தியத்தின் சத்தியமே; உலகின் வேந்தர்க்
கெல்லாம் வேந்தே! -
உலகில் உள்ள அரசர்க்கெல்லாம் அரசனே;  நின்
உயிரை உய்யும் வகை ஓம்பாது -
உன்னுடைய உயிரைப் பிழைக்கும்
வகையில்பாதுகாக்காமல்;  இங்ஙன் தேம்பில் - இவ்வாறு வாடினால்;
வையம் முழுதும்  துயரால்மறுகும் - இவ்வுலகம் முழுதும் துன்பத்தால்
கலங்கிச் சுழலும்; அரசே! - ; நம் ஐயன் -நம் மகன்;  முனிவனுடன்
வரினும் வரும் -
வசிட்டனுடன் (கான் ஏகாது) திரும்பி வந்தாலும்
வருவான்;  அயரேல் - சோர்வடையாதே;’  என்றாள் -

     உலகத்துக்காக வாழ்ந்த நீ துன்புற்றால்  இப்பொழுது  உலகமும்
துன்புறும்.  உனக்காகஇல்லாவிடினும் உலக மக்களுக்காகத் துன்பத்தில்
துவளாமல் இருக்க என வேண்டினாள் - ‘வரினும்வரும்’ என்பது  ஐயம்.
வருவது  உறுதியில்லை என்பது அவள் அறிந்தபடியைப் புலப்படுத்தி
நின்றது. ‘ஆல்’ அசை.                                         69

தயரதன் கோசலைபால் ‘இராமன் வருவானா’ எனக் கேட்டு வருந்தல்  

1675.என்று என்று, அரசன் மெய்யும்,
     இரு தாள் இணையும், முகனும்,
தன்தன் செய்ய கையால்
     தைவந்திடு கோசலையை,