பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 225

1680. ‘புக்குப் பெரு நீர் நுகரும்
     பொரு போதகம் என்று, ஒலிமேல்
கைக்கண் கணை சென்றது அலால்,
     கண்ணின் தெரியக் காணேன்,
அக் கைக் கரியின் குரலே
     அன்ற ஈது’ என்ன வெருவா,
‘மக்கள் - குரல்’ என்று அயர்வேன்,
     மனம் நொந்து, அவண் வந்தனெனால்.

     ‘(அது கேட்டு) புக்கு - ஆற்றில் நுழைந்து;  பெரு நீர் நுகரும் -
மிகுதியானநீரைக் குடிக்கும்; பொரு போதகம் என்று - போரிடும் யானை
என்று கருதி (அவ்ஓசைவழியே); கைக்கண் கணை சென்றது  அலால் -
கையின்கண் இருந்த அம்பு சென்றதேஅல்லாமல்; கண்ணின் தெரியக்
காணேன் -
கண்ணால் நன்கு விளங்கப் பார்க்காத நான்; (அலறும் ஒலி
வந்தவுடன்); ‘ஈது அக் கைக்கரியின் குரல் அன்று’ என்ன வெருவா -
இதுநாம் நினைத்த துதிக்கை உடைய யானையின் ஒலி அன்று என்று
கருதிப் பயந்து;  ‘மக்கள் குரல்’ என்று அயர்வேன் - மனிதக் குரல்
என்று கருதிச் சோர்ந்து;  மனம் நொந்து -மனம் வருந்தி;  அவண்
வந்தனென் -
நீர் முகக்கும்  துறைக்கு வந்தேன்.’

     விழுந்து அலறிய போதுதான் மனிதக் குரல் என்று வேறுபாடு
அறிந்தேன். நடுங்கினேன்என்றான். ‘ஆல்’ அசை.                   75

1681. ‘கையும் கடனும் நெகிழக்
     கணையோடு உருள்வோற் காணா,
மெய்யும் தனுவும் மனனும்
     வெறிது ஏகிட, மேல் வீழா,
‘ஐய! நீதான் யாவன்?
     அந்தோ! அருள்க” என்று அயர,
பொய் ஒன்று அறியா மைந்தன்,
     “கேள் நீ ” என்னப் புகல்வான்.

     ‘கையும் கடனும் நெகிழ - கையும்  குடமும் நெகிழ்ந்து விலக;
கணையோடுஉருள்வோன் காணா - அம்போடு தரையில்  உருளுகின்ற
முனிமகனைக் கண்டு;  மெய்யும் தனுவும்மனனும் வெறிது ஏகிட - (என்)
உடலும் வில்லும் மனமும் வெறுமையாகிச் செல்ல;  மேல்வீழா - மேலே
விழுந்து;  ‘அந்தோ! - ஐயோ;  ஐய! - ஐயனே;  நீ தான்யாவன் - நீ
யார்;  அருள்க’ - சொல்வாயாக;’  என்று அயர - என்றுகேட்டுச்
சோர்வடைய;  பொய் ஒன்று அறியா மைந்தன் -