பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 227

     ‘நீர் உண் வேட்கை மிகவே - நீர் உண்ணுகின்ற விருப்பம்
மிகுதலால்;  உயங்கும் எந்தைக்கு - வருந்துகின்ற  என் தந்தைக்கு; ஒரு
நீ
- ஒப்பற்ற  நீ; தண்ணீர்  கொடுபோய் அளித்து - குளிர்ந்த நீரைக்
கொண்டுபோய்க் கொடுத்து;  என் சாவும் உரைத்து  - என் இறப்பையும்
அவர்களுக்குத் தெரிவித்து;  ‘உம் புதல்வன்விண்மீது  அடைவான்
தொழுவான்’ எனவும் விளம்பு
- உம் மகன் இறந்து  சுவர்க்கம்
செல்கின்றவன் உம்மை வணங்கினான் என்கின்ற செய்தியையும்
அறிவிப்பாயாக;  என்று -எனச் சொல்லி;  எண் நீர்மையினான் -
புகழத்தக்க நற்குண நற் செயல்களால்;  விண்ணோர்  எதிர்கொண்டிட -
தேவர்கள் வரவேற்க; ஏகினன் -(பரலோகத்திற்குச்) சென்றான்.

     ‘எந்தை’ எனவே தாயும் அடங்கியது. ‘அவர்’ என்று பின்வரும்
பன்மையும் - ‘உம்’ என்ற முன்னிலையும் அதுபற்றி வந்தனவே.  செய்த
குற்றத்தை நினைத்துக்கசிந்துருகித் துடிக்கும் மனம் உடையவனாயினமை
பற்றித் தயரதனை ‘ஒரு நீ’ என்றான் முனிகுமரன்.‘ஆல்’ அசை.       78

1684.‘மைந்தன் வரவே நோக்கும்,
     வள மாதவன் பால், மகனோடு
அம் தண் புனல் கொண்டு அணுக,
     “ஐயா, இதுபோது அளவாய்
வந்து இங்கு அணுகாய்; என்னோ
     வந்தது? என்றே, நொந்தேம்;
சந்தம் கமழும் தோளாய்,
     தழுவிக் கொள வா" எனவே.

     ‘மைந்தன் வரவே நோக்கும் - மகனது வருகையையே எதிர்
பார்த்துக்கொண்டிருக்கின்ற; வள மாதவன்பால் - மிக்க தவத்தை உடைய
முனிவனிடம்; மகனோடு - (இறந்த) மகனோடு; அம் தண்புனல் கொண்டு
அணுக -
அழகிய குளிர்ந்த நீரை எடுத்துக் கொண்டு  நெருங்கிச் செல்ல;
‘ஐயா! - மகனே;  இது போது அளவாய் -இவ்வளவு நேரமாய்; வந்து
இங்கு அணுகாய் -
இங்கு வந்து சேராமையால்;  என்னோ வந்தது? -
உனக்கு என்ன நேர்ந்ததோ;  என்றே - என்று நினைத்து;  நொந்தேம்-
வருந்தினோம்;  சந்தம்  கமழும் தோளாய்! - சந்தனம்  மணக்கின்ற
தோளைஉடைய மகனே;  தழுவிக் கொள வா’ - நாங்கள் தழுவிக்
கொள்ளும்படி (அருகில்) வா; என - என்று சொல்லி.

     தசரதன் இறந்த மகன் உடலை  எடுத்துக்கொண்டு தண்ணீருடன் கண்
இழந்த முனி தம்பதிகளைஅணுக, அவர்கள் தம் மகன் வந்ததாகவே
கருதினர்  என்பது  இதனால் விளங்கும்.  ‘ஏ’ ஈற்றசை.              79