பக்கம் எண் :

228அயோத்தியா காண்டம்

1685.‘ “ஐயா! யான் ஓர் அரசன்;
     அயோத்தி நகரத்து உள்ளேன்;
மை ஆர் களபம் துருவி,
     மறைந்தே வதிந்தேன், இருள்வாய்;
பொய்யா வாய்மைப் புதல்வன்
     புனல் மொண்டிடும் ஓதையின்மேல்,
கை ஆர் கணை சென்றதுஅலால்,
     கண்ணின் தெரியக் காணேன்.

     ‘ஐயா! -  சுவாமி;  யான் அயோத்தி நகரத்து  உள்ளேன் ஓர்
அரசன்
-அயோத்தி  நகரத்தில் உள்ள ஓர் அரசனாவேன்;  மைஆர்
களபம் துருவி மறைந்து வதிந்தேன்-
கருமை பொருந்திய யானையைத்
தேடி மறைந்து  தங்கியிருந்தேன்; இருள்வாய் -இருட்டில்; பொய்யா
வாய்மைப் புதல்வன்
- சத்திய வாக்கினை உடைய உங்கள் மகன்; புனல்
மொண்டிடும்  ஓதையின்மேல் -
நீரை முகக்கும் ஓசையினிடமாக;  கை
ஆர் கணைசென்றது அலால் -
கையில் உள்ள அம்பு சென்றதே
அல்லாமல்; கண்ணில் தெரியக்காணேன்’ - (நீர் முகப்பாரைக்) கண்ணில்
விளங்கப் பார்த்தறியேன்’ ஆயினேன்.

     ஓசையின் மூலம் அம்பு எய்தேன். பார்த்து எய்தேனில்லை என்பதால்
அறிவுபூர்வமாகநிகழ்ந்த கொலை அன்று என்றானாம்.  ‘மறைந்தே’ ‘ஏ’
காரம் தேற்றம்.                                              80

1686.‘ “வீட்டுண்டு அலறும் குரலால்,
     வேழக் குரல் அன்று எனவே
ஓட்டந்து எதிரா, ‘ நீ யார்?’
     என, உற்ற எலாம் உரையா,
வாட்டம் தரும் நெஞ்சினன் ஆய்,
     நின்றான் வணங்கா, வானோர்
ஈட்டம் எதிர் வந்திடவே,
     இறந்து ஏகினன் விண்ணிடையே.

     ‘வீட்டு உண்டு - அம்பு விடுதலால் அடிபட்டு; அலறும் குரலால் -
கதறுகின்றசப்தத்தால்; வேழக் குரல் அன்று எனவே - யானையின் குரல்
அன்று  என்று கருதி;  ஓட்டந்து - ஓடி;  எதிரா - (உங்கள் மகனைச்)
சந்தித்து;  ‘நீ யார்’ என -நீ யார் என்று (நான் கேட்க குமரன்); உற்ற
எலாம் உரையா -
நடந்தவை அனைத்தையும்சொல்லி;  வாட்டம் தரு
நெஞ்சினனாய் -
வாடிப் போன மனம்  உடையவனாகி;  வணங்கா
நின்றான்
- உங்களிருவருக்கும் வணக்கம் தெரிவித்து, பேச்சு அடங்கினான்;
வானோர் ஈட்டம்  எதிர் வந்திட -