(மகன் இறந்தான் என்பது கேட்ட அவ் இரு முதுகுரவரும்) ‘வீழ்ந்தார் அயர்ந்தார்புரண்டார் - தரையில் விழுந்து சோர்வு அடைந்து புரண்டார்கள்; ‘இன்று விழிபோயிற்று’ என்றார் - இன்றைக்கு எங்கள் கண்கள் போயின என்றார்; துன்பக் கடலுள்ஆழ்ந்தார் - துன்பம் எனும் பெருங்கடலுள் மூழ்கினர்; ‘ஐயா! ஐயா’ என்றார் -(மகனை நினைத்து) ஐயனே ஐயனே என்றார்; ‘நெஞ்சைப் போழ்ந்தாய்’ என்றார் -(எங்கள்) மனத்தைப் பிளந்துவிட்டாய் என்றார்; ‘நீ பொன்நாடு அதனில் போய் வாழ்ந்தே இருப்பத் தரியேம்’ - நீ பொன்னுலகம் சென்று அங்கு வாழ்ந்து இருப்ப நாங்கள்தனித்திருக்க மாட்டேம்; இனியே வந்தேம், வந்தேம் - இப்பொழுதே வந்துவிட்டோம், வந்து விட்டோம் (என்ற புலம்பினர்.) இறந்த மகனின் பெற்றோர்கள் புலம்பினர். இனி ஒரு செயலும் செய்ய இயலாதவர்களாகஆனோம் என்பது கருத்து. 83 | 1689. | ‘என்று என்று அயரும் தவரை, இரு தாள் வணங்கி, “ யானே இன்று உம் புதல்வன்; இனி, நீர் ஏவும் பணி செய்திடுவேன்; ஒன்றும் தளர்வுற்று அயரீர்; ஒழிமின் இடர்” என்றிடலும், “வண் திண் சிலையாய் கேண்மோ” எனவே, ஒரு சொல் வகுத்தான்: |
‘என்று என்று - இவ்வாறு பலபடியாகப் புலம்பி; அயரும் - சோர்வடைகிற; தவரை - முனிவரை; இருதாள் வணங்கி - திருவடிகளில் வணங்கி; யானே இன்றுஉம் புதல்வன் - நான் இன்று முதல் உங்கள் மகன் ஆவேன்; இனி நீர் ஏவும்பணிசெய்திடுவேன் - இனி மேல் நீங்கள் இடும் கட்டளையைச் செய்து முடிப்பேன்; ஒன்றும்தளர்வுற்று அயரீர் - சிறிதும் சோர்வடையாதீர்; இடர் ஒழிமின்’- துன்பம்நீங்குங்கள்; என்றிடலும் - என்று சொல்லவும்; ‘வன் திண் சிலையாய்! -வலிய கட்டமைந்த வில்லை உடையவனே; கேண்மோ’ - கேட்பாயாக; எனவே - என்று; ஒரு சொல் வகுத்தான் - (அம்முனிவன்) ஒரு வார்த்தை சொன்னான். ‘யானே’ ‘ஏ’ காரம் தேற்றம். ஒழிமின் - முன்னிலைப் பன்மை வினைமுற்று. ‘கேண்மோ’ -‘மோ’ முன்னிலை அசைச்சொல். காமம் செப்பாது கண்டது மொழிமோ’ (குறுந்.2) என்புழிப் போல. 84 | 1690. | ‘ “கண்ணுள் மணிபோல் மகவை இழந்தும் உயிர் காதலியா, |
|