பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 231

 உண்ண எண்ணி இருந்தால்,
     உலகோர் என் என்று உரையார்?
விண்ணின்தலை சேருதும் யாம்;
     எம்போல், விடலை பிரிய,
பண்ணும் பரி மா உடையாய்;
     அடைவாய், படர் வான்” என்னா.

     ‘கண் உள் மணி போல் மகவை இழந்தும் - கண்ணிற்குள்ளே
உள்ள கருமணிப் பாவைபோன்ற சிறந்த மகனை இழந்த பிறகும்;  உயிர்
காதலியா
- உயிர்மேல் ஆசை வைத்து; உண்ண எண்ணி இருந்தால் -
உண்பதற்கு நினைத்து  (உலகில் வாழ்ந்து) இருந்தால்;  உலகோர் என்
என்று  உரையார்? -
உலகில் உள்ளவர்கள் (எங்களை) என்னவென்று
பழியார்; யாம் விண்ணின்தலை சேருதும் - நாங்களும் (இறந்து) மேல்
உலகம்  சேர்கிறோம்;  பண்ணும்  பரிமா உடையாய் - அலங்கரிக்கப்
பெற்ற குதிரையை உடைய மன்னனே;  எம்போல் - எங்களைப் போல;
விடலை பிரிய - மகன் பிரிந்து செல்ல;  படர்வான் அடைவாய்’ -
அகன்ற வானுலகை அடைவாயாக;  என்னா - என்று   சொல்லி.

     உலகோரது பழிமொழிக்கு அஞ்சி யாங்கள் வானுலகு சேர்வோம்
என்று  மனைவியையும்,உளப்படுத்தி முனிவன் கூறினான் - ‘கண்ணிற்
கருமணி’ என்றான் மகனை;  இதுவரை இவர்களுக்குப்பார்வையாக
இருந்தவன் ஆதலின்.                                          85

1691.‘ “ தாவாது ஒளிரும் குடையாய்!
     ‘தவறு இங்கு இது; நின் சரணம்,
காவாய்’ என்றாய்; அதனால்,
     கடிய சாபம் கருதேம்;
ஏவா மகவைப் பிரிந்து, இன்று
     எம்போல் இடர் உற்றனை நீ
போவாய், அகல் வான்” என்னா,
     பொன் நாட்டிடை போயினரால்.

     ‘தாவாது  ஒளிரும் குடையாய்! - கெடாது  ஒளிவீசும் வெண்குடை
வேந்தே; ‘இங்குஇது தவறு, நின் சரணம், காவாய்’ என்றாய் - இங்கு
நான் செய்த இச்செயல் என் தவறே,நின் திருவடியைப் புகலாக
அடைந்தேன்,  என்னைக் காப்பாற்று  என்று சொன்னாய்;  அதனால் -
(குற்றத்தை ஒப்புக்கொண்டு) சரணம் அடைந்தமையால்;  கடிய சாபம்
கருதேம் -
கொடிய சாபம் கொடுக்கக் கருதவில்லை;  ஏவா மகவைப்
பிரிந்து -
கட்டளை இடவேண்டாது குறிப்பறிந்து செய்யும் நன்மகனைப்
பிரிந்து;  இன்று எம்போல் - இன்று நாங்கள்