பக்கம் எண் :

232அயோத்தியா காண்டம்

துன்பப்படுவது போல்;  இடர் உற்றனை - துன்பம் அடைந்தனையாய்; நீ
அகல் வான்போவாய் -
நீ அகன்ற வானத்தை அடைவாய்;  என்னா -
என்று  சாபம்  தந்து; பொன் நாட்டிடை போயினர் - விண்ணுலகம்
சென்றார்கள்.

     ‘கடிய சாபம்’ என்பது ‘பிள்ளை இறக்க’ என்று சொல்லாமல், பிள்ளை
பிரிய என்றுசொல்லியது கருதி. ‘எம்போல்’ என்றாலும், பிள்ளை இறப்பதை
நீக்கிய உவமை; நாங்கள் உயிர்துறப்பது போல் நீயும் உயிரிழப்பாய் என்று
சுட்டும் அளவில் நின்றது. ‘ஆல்’ ஈற்றசை.   86

1692.‘சிந்தை தளர்வுற்று, அயர்தல்
     சிறிதும் இலெனாய், “இன் சொல்
மைந்தன் உளன்’ என்றதனால்,
     மகிழ்வோடு இவண் வந்தனெனால்;
அந்த முனி சொற்றமையின்,
     அண்ணல் வனம் ஏகுதலும்,
எம்தம் உயிர் வீகுதலும்,
     இறையும் தவறா’ என்றான்.

     ‘சிந்தை தளர்வுற்று அயர்தல் சிறிதும் இலெனாய் - மனம்
தளர்ந்து சோர்வடைதல்சிறிதும் இல்லாமல்;  இன் சொல் மைந்தன்
உளன்’ என்றதனால்
- இனிய சொற்களைப்பேசும் மகன் பிறப்பான்’
என்பது அவன் சாபத்தால் ஏற்பட்டதனால்;  இவண் -நகரத்துக்கு;
மகிழ்வோடு வந்தனென் - மகிழ்ச்சியோடு வந்து சேர்ந்தேன்; அந்த முனி
சொற்றமையின்
- அந்த முனிவன் சொன்னபடியால்;  அண்ணல் வனம்
போகுதலும்
-இராமன் (என்னைப்) பிரிந்து  காடு செல்லுதலும்;  எம்தம்
உயிர் வீகுதலும்
- என்னுடைய உயிர் போவதும்;  இறையும்  தவறா’ -
சிறிதளவும் மாறா;  என்றான் -

     மகன் இன்றி இருந்த தயரதனுக்கு முனிவன் சாபம் மகன் உண்டு
என்பதை உணர்த்திற்று  என்பதால் அப்போதைக்கு அது
மகிழ்ச்சியானதாகவே ஆயிற்று என்றானாம் - மகன் பிறப்பது  முனிவன்
சாபத்தால் உண்மையாகி நிறைவேறியமையின் மகன்பிரிவதும், தன்னுயிர்
போவதும்கூட அச்சாபப்படி நிறைவேறுவது  உறுதி என்றான்.  ‘ஆல் ’
அசை.‘என்றா ன்’ என்றமையவேண்டியது  எதுகை நோக்கி எந்தம் என
நின்றது.                                                     87

வசிட்டன் அரசவை அடைதல்  

கலிவிருத்தம்

1693.உரை செய் பெருமை உயர்
     தவத்தோர் ஓங்கல்,
புரைசை மத களிற்றான்
     பொற் கோயில்முன்னர்,