பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 233

 முரைசம் முழங்க, முடி சூட்ட
     மொய்த்து, ஆண்டு
அரைசர் இனிது இருந்த நல்
     அவையின் ஆயினான்.

     உரைசெய் பெருமை - புகழப்படும் பெருமை உடைய;  உயர்
தவத்தோர் ஓங்கல்
- உயர்ந்த முனிவர்களுக்கெல்லாம்  மலைபோல
உயர்ந்த வசிட்டன்; புரைசை மத களிற்றான்பொன் கோயில் மன்னர்-
மணிகட்டிய கயிற்றை  உடைய மத  யானையை உடைய மன்னனது
அரண்மனைமுன்றிலில்;  முரைசம் முழங்க - முரச வாத்தியம் ஒலிக்க;
முடி சூட்ட மொய்த்து- இராமனுக்குப் பட்டாபிடேகம் செய்ய நெருங்கி;
ஆண்டு - அவ்விடத்தே;  அரைசர் - மன்னர்கள்; இனிது  இருந்த நல்
அவையின் ஆயினான்
- இனிமையாக வீற்றிருந்த நல்லசபாமண்டபத்தை
வந்து  அடைந்தான்.

     இராமனது  முடிசூட்டு விழாவை முன்னிட்டு மன்னர்கள்
நெருங்கியிருந்த அத்தாணி மண்டபத்துக்குவசிட்டன் வந்து சேர்ந்தான்.
முன்பே அரசர்கள் கோசலையின் புலம்பல் கேட்டு ‘அவ் ஆறுஅறிவாய் ’
என்ன முனிவன் வந்தவன் ஆதலின்,  (1639.) அவர்களுக்குச் செய்தி
அறிவிக்கச்சென்று  சேர்ந்தான் என்க.  புரசை என்பது  எதுகை நோக்கி‘
புரைசை’ என நின்றது. யானைக்கழுத்தில் இடும் கயிறு என்பது பொருள்.
முரசம் -  முரைசம் போலி.                                      88

அரசர் முனிவனைக் கேட்டல்  

1694.வந்த முனியை முகம் நோக்கி,
     வாள் வேந்தர்,
‘எந்தை! புகுதற்கு இடையூறு
     உண்டாயதோ?
அந்தம் இல் சோகத்து அழுத
     குரல்தான் என்ன?
சிந்தை தெளிந்தோய்! தெரி எமக்கு ஈது’
     என்று உரைத்தார்.

     வாள் வேந்தர் - வாள் உடைய அரசர்;  வந்த முனியை முகம்
நோக்கி
-வந்த வசிட்டனைப் பார்த்து;  ‘சிந்தை தெளிந்தோய்! - மனம்
தெளிந்த மாமுனிவனே; எந்தை! - எம் தந்தை போல்பவனே;  புகுதற்கு
இடையூறு  உண்டாயதோ?
- இராமன்முடிசூட்டு விழாவிற்கு வருதற்கு
ஏதேனும் தடை உண்டாகியதா; அந்தம் இல் சோகத்து அழுதகுரல்தான்
என்ன?
- முடிவில்லாத துன்பத்துடன் கூடிய அழுகையொலி எதனால்
ஆகியது;  எமக்குஈது  தெரி’ -  எங்களுக்கு இதனைத் தெரிவிப்பாயாக;’
என்று  உரைத்தார் -.