உண்மைக்கு உறைவிடமான வசிட்ட முனிவனது வார்த்தை; செவியில் சாராத முன்னம் -(தங்கள்) காதுகளில் சேர்வதற்கு முன்னமே; ஆராத காதல் அரசர்களும்- (இராமனதுமுடிசூட்டு விழாவில்) அடங்காத அன்பை உடைய அரசர்களும்; அந்தணரும் - வேதியரும்; மற்று உள்ள மாந்தர்களும் - வேறு உள்ள மனிதர்களும்; வார் ஆர் முலையாரும் - கச்சணிந்த தனத்தையுடைய மகளிரும்; தயரதனைப் போல் வீழ்ந்தார்- மற்றுள்ள மாந்தர்கள் - அமைச்சர், சேனைத் தலைவர், தூதுவர் முதலியவர். பெண்டிர்துன்பம் பெரிதாய்த் தோன்றுமாதலின் செய்யுளில் முதற்கண் உரைக்கப்பட்டது. தயரதன்தன்மகன் காரணமாகத் துன்பத்தில் ஆழ்ந்தது போலவே அத்தகைய அன்புடையவர்கள் இவர்களும்ஆதலின் ‘தயரதனைப் போல் ’ துன்புற்றார் என்றார். அதனையே ‘ஆராத காதல்’ எனவும் கூறினார். 92 | 1698. | புண் உற்ற தீயின் புகை உற்று உயிர் பதைப்ப, மண் உற்று அயர்ந்து மறுகிற்று, உடம்பு எல்லாம்,; கண் உற்ற வாரி கடல் உற்றது; அந் நிலையே, விண் உற்றது, எம் மருங்கும் விட்டு அழுத பேர் ஓசை. |
உடம்பு எல்லாம் -மக்கள் உடல்கள் எல்லாம்; புண் உற்ற தீயின்- புண்ணில் பட்ட நெருப்புப் போல; புகை உற்று - அனல் மூச்சு விட்டு; உயிர் பதைப்ப- உயிர் துடிதுடிக்க; மண் உற்று - நிலத்தில் பொருந்தி; அயர்ந்து -சோர்ந்து; மறுகிற்று - சுழன்று புரண்டது; கண் உற்ற வாரி - கண்ணிலிருந்து வந்தநீர்ப்பெருக்கு; கடல் உற்றது - கடலாகப் பெருகியது; எம் மருங்கும் - எப்பக்கத்திருந்தும்; விட்டு அழுத பேரோசை - (எல்லோரும்) வாய்விட்டு அழுத குரல் ஒலி;விண் உற்றது - வானத்தை அடைந்தது. ‘உடம்பு எல்லாம் மறுகிற்று’ ஒருமை பன்மை மயக்கம். தொகுதி ஒருமை எனக் கூறி வழாநிலைஎனலும் ஆம். கண்ணீர்ப் பெருக்கு கடலைச் சென்று அடைந்தது எனலும்ஆம். 93 | 1699. | மாதர் அருங் கலமும் மங்கலமும் சிந்தி, தம் கோதை புடைபெயர, கூற்று அனைய கண் சிவப்ப, |
|