| | பாத மலர் சிவப்ப, தாம் பதைத்துப் பார் சேர்ந்தார் - ஊதை எறிய ஒசி பூங் கொடி ஒப்பார். |
மாதர்தாம் - மகளிர்; அருங்கலமும் மங்கலமும் சிந்தி - அரிய அணிகலன்களும் மங்கலநாணும் கீழே விழ; தம் கோதை புடை பெயர - தம்முடைய கூந்தல்பக்கத்தில் குலைந்து விழ; கூற்று அனைய கண் சிவப்ப - யமனை ஒத்த கண்கள்சிவக்க; பாதமலர் சிவப்ப - அடிமலர் சிவக்க; ஊதை எறிய - பெருங்காற்று வீசுவதனால்; ஒசி - ஒடிந்து வீழ்கின்ற; பூங்கோடி ஒப்பார் - பூங்கொடியைஒத்தவர்களாய்; பதைத்துப் பார் சேர்ந்தார் - துடித்துப் பூமியில் விழுந்தார்கள். ‘பூங்கொடி’ இயல்பில் மெல்லிய மகளிர்க்கு உவமை. இங்கே ‘ஊதை எறிய’ என்றபடியால், துயர நிலையில் துடித்துத் தரையில் வீழும் பெண்களுக்கு உவமை ஆயிற்று. 94 | 1700. | ‘ஆ! ஆ! அரசன் அருள் இலனே ஆம்’ என்பார்; ‘காவா, அறத்தை இனிக் கைவிடுவேம் யாம்’ என்பார்; - தாவாத மன்னர் - தலைத்தலை வீழ்ந்து ஏங்கினார்; மா வாதம் சாய்த்த மராமரமே போல்கின்றார். | தாவாத மன்னர் - (வலி) அழியாத அரசர்; ஆ! ஆ! - அந்தோ! அந்தோ; அரசன் - தசரதன்; அருள் இலன்ஆம்’ - இரக்கம் இல்லாதவன்; என்பார்-; யாம் இனி அறத்தைக் காவா கைவிடுவேம்’- நாங்கள் இனிமேல் தருமத்தைப்பாதுகாக்காமல் கைவிட்டு விடுவோம்; என்பார்-; மா வாதம் சாய்த்த மராமரமேபோல்கின்றார் - பெருங் காற்றால் வீழ்த்தப்பட்ட ஆச்சா மரத்தைப் போன்றவராய்;தலைத் தலை- மண்மேல்; வீழ்ந்து ஏங்கினார் - விழுந்து அழுதார். தயரதன் தருமம் காத்து அவலத்திற் பட்டதால், இனி இத்தருமத்தை யாமும் கைவிடுவோம் என்றார். ‘இலனே’ ‘ஏ’ காரம் தேற்றம். தலைத் தலை- முதல்தலை இடப்பெயர். இராண்டாவது தலை ஏழன் உருபு - தாமிருந்த இடத்தின்கண் விழுந்து அழுதார் ’என்பது பொருள். 95 |