பக்கம் எண் :

238அயோத்தியா காண்டம்

1701. கிள்ளையொடு பூவை
     அழுத; கிளர் மாடத்து -
உள் உறையும் பூசை
     அழுத; உரு அறியாப்
பிள்ளை அழுத;
     பெரியோரை என் சொல்ல? -
‘வள்ளல் வனம் புகுவான் ’
     என்று, உரைத்த மாற்றத்தால்.

     வள்ளல் - இராமன்;  ‘வனம் புகுவான் - காடு செல்வான்;’  என்று
உரைத்த மாற்றத்தால்
- என்று சொல்லிய சொல்லால்;  கிள்ளையொடு
பூவை அழுத
-கிளியும்,  நாகணவாய்ப் பறவையும் அழுதன;  கிளர்
மாடத்து  உள் உறையும் பூசை அழுத
-விளங்குகின்ற  மாளிகையின்
உள்ளே வசிக்கின்ற வீட்டுப் பூனைகள் அழுதன;  உரு அறியாப்பிள்ளை
அழுத
- வடிவத்தைப் பார்த்து அறிய மாட்டாத சிறு குழந்தைகள் அழுதன;
பெரியோரை என் சொல்ல? - பெரியோர்கள் அழுதமைமையப் பற்றி
என்னவென்று சொல்வது?

     அஃறிணைப் பொருள்களும்  இராமன் பிரிவால் துயர் உறுவனவாகச்
சொல்கிறார். ‘ உரு அறியாப் பிள்ளை’ கருவில் இருக்கும்  வடிவு காணாத
குழந்தைகளும் அழுதன என்று துக்கத்தின் உச்சநிலையைக் காட்டிப்
பொருள் உரைப்பினும் அமையும்.  இவையே இவ்வாறாயினமையின்
பெரியோர்கள்அழுதமைபற்றிச் சொல்ல வேண்டுவதில்லை.            96

1702.சேதாம்பல் போது அனைய
     செங் கனி வாய் வெண் தளவப்
போது ஆம் பல் தோன்ற,
     புணர் முலைமேல் பூந் தரளம்
மா தாம்பு அற்றென்ன
     மழைக் கண்ணீர் ஆலி உக,
நா தாம் பற்றா மழலை
     நங்கைமார் ஏங்கினார்.

     நா தாம் பற்றா மழலை நங்கைமார் - நாவின் கண் பிடிப்புப்
பொருந்தாத மழலைச்சொற்களைப் பேசுகின்ற இனிய இளமகளிர்;
சேதாம்பல் போது அனைய செங்கனிவாய் -செவ்வல்லிப் பூவை ஒத்த
சிவந்த பழம் போன்ற வாயிலிருந்து;  வெண் தளவப் போது ஆம்பல்
தோன்ற
- வெண்மையான முல்லையின் மலர் அரும்பு ஆகிய பல் வெளித்
தெரிய; புணர்முலைமேல் - இரண்டாகச் சேர்ந்த மார்பகங்களின் மேல்;
மழைக் கண்ணீர் ஆலி -மழை போன்ற கண்ணீர்த்