பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 239

துளி; பூந்தரளம் - அழகிய முத்து; மா தாம்பு அற்று என்ன - சிறந்த
கயிறுஅறுந்து ஒவ்வொன்றாக விழுவது போல; உக - சிந்த; ஏங்கினார் -
அழுதார்கள்.

     எழுத்து விளங்காத மழலைப் பேச்சு என்பார் ‘நா தாம் பற்றா மழலை’
என்றார். ‘ வாயில்பல் வெளித் தோன்ற அழுதார்’ என்பது அவலத்தின்
உச்சம்.  இளமகளிர் நாணத்தாற் சிறந்தவர்ஆதலின் பல் வெளித் தோன்ற
நகுதலும் செய்யார்,  இன்று பல் வெளித் தோன்ற அழுகின்றனர்என்பதாம்.
இதனை இவள் மன்னும் ஒள்நுதல் ஆயத்தார் ஓராங்குத் திளைப்பினும்;
முன்நுனைதோன்றாமை  முறுவல் கொண்டு அடக்கித் தன்,  கண்ணினும்
முகத்தினும் நகுபவள்;  பெண் இன்றி, யாவரும் தண் குரல் கேட்ப நிரை
வெண்பல் மீயுயர் தோன்ற நகா அ நக்காங்கே, .....உண்கண்ஆயிதழ் மல்க
அழும ’் என்னும் (கலித். 142. 6 -12) பாடற் பகுதி கொண்டு விளங்க அறிக.
கழுத்தில் அணிந்த முத்துவடக் கயிறு அறுந்து ஒவ்வொரு முத்தாக மார்பில்
விழுவது  போலக்கண்ணீர்த் துளி முலைத்தலை வீழ்கிறது என்றார்.     97

1703.ஆவும் அழுத; அதன் கன்று
     அழுத; அன்று அலர்ந்த
பூவும் அழுத; புனல் புள்
     அழுத; கள் ஒழுகும்
காவும் அழுத; களிறு அழுத;
     கால் வயப் போர்
மாவும் அழுத; - அம்
     மன்னவனை மானவே.

     அம் மன்னவனை மான - (இராமன் பிரிவால் துயர் உறும்)
தசரதனை ஒப்ப;  ஆவும்அழுத - பசுக்கள் அழுதன;  அதன் கன்று
அழுத
- அப் பசுக்களின் கன்றுகள் அழுதன;  அன்று அலர்ந்த பூவும்
அழுத
- அப்போது  மலர்ந்த பூக்களும் அழுதன;  புனல் புள் அழுத-
நீர்வாழ் பறவை இனங்கள் அழுதன; கள் ஒழுகும் காவும் அழுத - தேன்
சிந்தும் மலர்ச்சோலைகள் அழுதன; களிறு அழுத - யானைகள் அழுதன;
கால் வயப் போர் மாவும் அழுத- காற்றை ஒத்த வலிய போர் வல்ல
குதிரைகளும் அழுதன.

     ஓரறிவுயிர் முதலாக ஐயறிவுயிர் வரை அனைத்தும் இராமனது பிரிவால்
அழுதன என்பார் முதலும் முடிவும் கூறினார்.                      98

1704.ஞானீயும் உய்கலான்
     என்னாதே, நாயகனைக்
‘கான் ஈயும் ’ என்று உரைத்த
     கைகேசியும், கொடிய