| 1706. | ‘‘மண் செய்த பாவம் உளது’ என்பார்; ‘மா மலர்மேல் பெண் செய்த பாவம் அதனின் பெரிது ’ என்பார்; ‘புண் செய்த நெஞ்சை, விதி’ என்பார்; ‘ பூதலத்தோர் கண் செய்த பாவம் கடலின் பெரிது ’ என்பார். | (நகர மாந்தர்) ‘மண்செய்த பாவம் உளது’ என்பார் - ‘நிலமகள் செய்த தீவினை மிகுதியாக உள்ளது’ என்பர்; ‘ மாமலர் மேல் பெண் செய்த பாவம் அதனின் பெரிது’- சிறந்த தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் திருமகள் செய்த தீவினை அதைக்காட்டிலும் மிகுதி; ’ என்பார்-; ‘புண் செய்த நெஞ்சை விதி - புண்பட்ட மனத்தைப் பார்த்து இது விதியால் விளைந்தது;’ என்பார் - ; பூதலத்தோர் கண் செய்த பாவம் கடலின் பெரிது’ - இப்பூமியில் உள்ளவர்களின் கண் செய்த தீவினை கடலைக்காட்டிலும் மிகுதி;’ என்பார் - . இராமனால் ஆளப் பெறாமையால் பூமியும், அனுபவிக்கப் பெறாமையால் செல்வமகளும் பாவம் செய்தவர் ஆயினர். மணி முடி தரித்துச் செல்லும் காட்சியைக் காணவேண்டிய கண்கள் மரவுரி தரித்துக் காடு செல்லும் காட்சியைக் காண நேரிட்டமையின் கண் செய்த பாவம் மிகுதியாம். 101 | 1707. | ‘ஆளான் பரதன் அரசு’ என்பார்; ‘ஐயன், இனி மீளான்; நமக்கு விதி கொடிதேகாண்’ என்பார்; ‘கோள் ஆகி வந்தவா, கொற்ற முடிதான்’ என்பார்; ‘மாளாத நம்மின் மனம் வலியார் ஆர்?’ என்பார். | ‘பரதன் அரசு ஆளான் - பரதன் அரசாட்சியை ஏற்கமாட்டான்;’ என்பார் - ; ‘ ஐயன் இனி மீளான் - இராமன் இனிமேல் நாடு திரும்ப மாட்டான்; நமக்கு விதி கொடிதே காண்’ - நமக்கு ஊழ் வினை மிகவும் கொடுமையானது;’ என்பார் - ; ‘ கொற்ற முடிதான் - வெற்றியுடைய மகுடம்; கோள் ஆகி வந்தவா‘ - தீய இடையூறாகி வந்து சேர்ந்தபடி என்னே;’ என்பார் - ; மாளாத நம்மின் மனம் வலியார் ஆர்?’ - (இத்தனையும் கேட்டு வைத்தும் கண்டு வைத்தும் ) இறந்துபடாத நம்மைக் காட்டிலும் உலகில் கொடுமனம் |