உடையவர்கள் யார் உளர்;’ என்பார் -. முடிசூடுதல் என்ற பேச்சு வரவில்லையானால் வனம் செல்லும் துயர்நிலை இராமனுக்கு வந்திராதேஎன்னும் ஆதங்கத்தால் முடியே இடையூறாகித் தீங்கு செய்தது என்பாராயினர். | 1708. | ‘ஆதி அரசன், அருங் கேகயன் மகள்மேல் காதல் முதிர, கருத்து அழிந்தான் ஆம்’ என்பார்; ‘சீதை மணவாளன் தன்னோடும் தீக் கானம் போதும்; அது அன்றேல், புகுதும் எரி’ என்பார். | ‘ஆதி அரசன் - மூல முதல் வேந்தனான தயரதன்; அருங்கேகயன் மகள்மேல் -அரிய கைகேயிமாட்டு; காதல் முதிர - அன்பு முற்றுதலால்; கருத்து அழிந்தான் ஆம்- மனம் மயங்கி அறிவு தடுமாறிவிட்டான்போலும்;’ என்பார்-; ‘சீதை மணவாளன்தன்னோடும் தீக்கானம் போதும் - (நாம்) சீதைக்கு நாயகனான இராமனோடு கொடிய காட்டிற்குப் போவோம்; அது அன்றேல் - அது முடியாமற் போகுமானால்; எரி புகுதும் - நெருப்பில் வீழ்ந்து உயிர் விடுவோம்;’ என்பார் - . ஆதி அரசன் - தசரதன், பிரதான மன்னன் என்பதாம். “ஆதி மன்னனை ஆற்றுமின்நீர்” என்று (1837.) வருதல் காண்க. 103 | 1709. | கையால் நிலம் தடவி, கண்ணீர் மெழுகுவார் ‘உய்யாள் போல் கோசலை’ என்று, ஓவாது வெய்து உயிர்ப்பார்; ‘ஐயா! இளங்கோவே! ஆற்றுதியோ நீ’ என்பார்; நெய் ஆர் அழல் உற்றது உற்றார், அந் நீள் நகரார். |
அந்நீள் நகரார் - அந்தப் பெரிய அயோத்தி நகரத்தில் உள்ளவர்கள்; கையால் நிலம் தடவிக் கண்ணீர் மெழுகுவார் - கையால் தரையைத் தடவித் தம் கண்ணீர்கொண்டு அதனை மெழுகுவாராயினர்; ‘கோசலை உய்யாள்’ என்று - ‘இனிக் கோசலை பிழைக்கமாட்டாள்’ என்று சொல்லி; ஓவாது வெய்து உயிர்ப்பார் - இடைவிடாமல் |