பக்கம் எண் :

258அயோத்தியா காண்டம்

மின்னலை வென்று விளங்குகின்ற வெயிலையும் நெருப்பையும் கொண்டு
செய்யப் பெற்ற வேலை உடைய இலக்குவனே;  கொற்ற மன்னன்
-
வெற்றியுடைய தயரதன்;  முன் -;  ‘முடிகொள்க’  என - மகுடத்தைச்
சூடி அரசு ஏற்க எனச் சொல்ல; ‘அரசு பின் மன்னும்குற்றம் பயக்கும்’
என்றல் பேணேன்
- அரசாட்சி பிறகு மிகுதியும் நமக்குக் குற்றங்களை
உண்டாக்கும் என்று கருதாமல்;  கொள்ள மூண்டது - ஏற்றுக்கொள்ள
முயன்றது;  என்குற்றம்  அன்றோ? - (இதில்)  பகைவன்மை அழிக்கும்
தயரதனாகிய  மன்னவனது  தவறு யாதுளது.’

     ஆராயாமல் அரசு ஆள ஒப்புக்கொண்டது என் தவறுதானே அன்றி,
அளி்த்தவன்மேல் தவறு  இல்லைஎன்றான் இராமன். அரசு பலர்
ஆசைப்படக் கூடிய ஒன்று.  இதனாற் பின்னர்ப் பல தீமைகள்விளையும்
என்று நான் கருதாமல் ஒப்புக்கொண்டமையால்  என்னைத்தான் தண்டிக்க
வேண்டுமேஅன்றி,  எந்தையைக் குறைகூறல்  சரியன்று  என்று
சமத்காரமாகக் கூறித் தம்பியை அடக்கினான்இராமன் என்க.          128

1734.‘நதியின் பிழை அன்று
     நறும் புனல் இன்மை; அற்றே,
பதியின் பிழை அன்று;
     பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று;
     மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு
     என்னை வெகுண்டது?’ என்றான்.

     ‘மைந்த! - மகனே!;  நறும் புனல் இன்மை - (என்றும்  நீர் உள்ள
ஆற்றிலே ஒரு சில காலங்களில்) நல்ல நீர் இல்லாமல் வற்றிப் போவது;
நதியின் பிழைஅன்று -அவ் ஆற்றின் குற்றம் அன்று;  அற்றே - அது
போலவே;  பதியின் பிழைஅன்று - (என்னைக் காடு செல்லும்படி
சொன்னது)  தந்தையின் குற்றம் அன்று;  பயந்துநமைப் புரந்தாள் -
(காடு செல்லும்படி வரம் வாங்கியது) பெற்று நம்மைக்காப்பாற்றிவளர்த்தவள்
ஆகிய கைகேயியின்;  மதியின் பிழை அன்று - அறிவினது  குற்றமும்
அன்று; மகன் பிழை அன்று - அவள் மகனாகிய பரதனது குற்றம் அன்று;
விதியின் பிழை- விதியால்  (நமது ஊழ்வினையால்)  விளைந்த குற்றமே
ஆகும். இங்ஙனம் இதனை ஆராயாது;  நீஇதற்கு வெகுண்டது
என்னை?’
- நீ இந்தச் செயலுக்கு இவர்களைக் காரணமாக்கிக் கோபித்தது
ஏன்?’ என்றான் -.

     ஊழ்வினை செலுத்தத் தாயும் தந்தையும் அவ்வினையின் கருவியாக
இருந்து செயல்பட்டனரேஅன்றி அவர்களாக நம்மேல் பகை கொண்டு
செய்தாரில்லை. மழைநீர்  வரத்து இன்மையால் சிலகாலம் ஆற்றில் நீர்
வற்றுவது