பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 259

போல் வினைவலியால் பெற்றோர் அன்பின்மை  உடையார் போலத்
தோன்றுவர், அவ்வளவேஎன்றானாம். மூவரையும்  தாயர் என ஒப்பக்
கருதல் பற்றிக் ‘கைகேயியைப் பயந்து நமைப்புரந்தாள்’ என்றான் இராமன்.                                                    129

இலக்குவன் பதில்  

1735.உதிக்கும் உலையுள் உறு தீ என
     ஊதை பொங்க,
‘கொதிக்கும் மனம் எங்ஙனம்
     ஆற்றுவென்? கோள் இழைத்தாள்
மதிக்கும் மதி ஆய், முதல்
     வானவர்க்கும் வலீஇது ஆம்,
விதிக்கும் விதி ஆகும், என்
     வில் - தொழில் காண்டி’ என்றான்.

     உலையுள் உதிக்கும்  உறு தீ என ஊதை பொங்க - (கொல்லன்)
உலைக்களத்துள்பிறக்கின்ற மிக்க நெருப்பைப் போல வெப்பமான
பெருமூச்சு மேலே பொங்கிவர;  ‘கொதிக்கும் மனம் - வெம்புகின்ற
மனத்தை;  எங்ஙனம் ஆற்றுவென் - எவ்வாறுதணியச் செய்வேன்;
கோள் இழைத்தாள் - தீங்கு செய்தவளாகிய கைகேயியின்; மதிக்கும் மதி
ஆய்
- அறிவுக்கும் அறிவு தருவதாய்;  முதல் வானவர்க்கும் - மும்
மூர்த்திகளாய தேவர்களுக்கும்;  வலிது ஆம் - வலிமையான;  விதிக்கும்
விதி ஆகும்
- (நீ சொல்லிய) ஊழ்வினையையும்  வென்று மாற்ற வல்ல
ஊழ் ஆகிய;  என் வில் தொழில்காண்டி’ - எனது வில்லின் செயலைப்
பார்ப்பாயாக;’  என்றான் -.

     விதியால் விளைந்தது என இராமன் சொல்ல, அந்த விதியையும் மாற்ற
வல்ல விதி  என்வில் என்றான் இலக்குவன். துடிக்கின்ற  மனத்தை ஆற்ற
முடியாமல் திணறுகிறேன் என்ற அவதியைமுதலில் வெளிப்படுத்துகிறான்;
பின்னர் இதற்கு  ஏதாவது  முடிவு கண்டால்தான் என்மனம் ஆறும்
என்பதாகப் பேசுகிறான்.                                        130

இராமன் தணிப்புரை  

1736.ஆய்தந்து, அவன் அவ் உரை
     கூறலும், ‘ஐய! நின்தன்
வாய் தந்தன கூறுதியோ,
     மறை தந்த நாவால்?
நீ தந்தது, அன்றே,
     நெறியோர்கண் நிலாதது? ஈன்ற
தாய் தந்தை என்றால், அவர்மேல்
     சலிக்கின்றது என்னோ?’