கின்ற மயக்கம் அற்ற நன்னெறியில் இருந்து கொண்டுள்ள; துணைத் தம்முனைப் -உன்னுடைய துணையாகிய அண்ணனைப் (பரதனை)ப்; போர் தொலைத்தோ? - சண்டையில்தோல்வியடையச் செய்தோ; சான்றோர் புகழும் தனித் தாதையை வாகை கொண்டோ? - பெரியோர்களாற் புகழப்பெறும் ஒப்பற்ற நம் தந்தையாகிய தயரதனை வெற்றி கொண்டோ; ஈன்றாளை வென்றோ?- பெற்ற தாயை (கைகேயியை) வெற்றி கொண்டோ; இக்கதம் -(உனக்கு வந்துள்ள) இக் கோபம்; இனித் தீர்வது?’ - இனி நீங்குவது;’ என்றான்-. அரசாட்சி பரதனுக்குக் கிடைத்திருப்பது என்பதெல்லாம் அயோத்தியில் உள்ளார் அறிந்தனவே. கேகய நாட்டில் உள்ள பரதனுக்கு அச்செய்தி இன்னும்தெரியாது ஆகலின், ‘இவ் வையம் என்கிற மையல் அறியப்படாத கேகய நாட்டில் வாழும் உன்அண்ணனாகிய பரதனை’ என்றும் இராமன் கூறியதாகக் கொள்க. ‘எள்ளரிய குணத்தால்’ இராமனையே அனையவன் பரதன் ஆகையால், இராமனுக்கு அரசில் ஆசையின்றிச் சன்மார்க்கத்தில் ஆசைசெல்லுமாப் போல; பரதனும் வைய மையலின்றி நன்னெறியில் வாழ்கின்றவன்’ என்பது உரைவிளக்கமாகும். 134 இலக்குவன் சினம் அடங்கல் | 1740. | செல்லும் சொல் வல்லான் எதிர் தம்பியும், ‘தெவ்வர் சொல்லும் சொல்லும் சுமந்தேன்; இரு தோள் எனச் சோம்பி ஓங்கும் கல்லும் சுமந்தேன்; கணைப் புட்டிலும், கட்டு அமைந்த வில்லும், சுமக்கப் பிறந்தேன்; வெகுண்டு என்னை?’ என்றான். |
செல்லும் சொல் வல்லான் எதிர் - (குறித்த செயலை) நிறைவேற்ற வல்லசொற்களைக் கூறுதல் வல்ல இராமன் எதிரே; தம்பியும் - இலக்குவனும்; ‘தெவ்வர்சொல்லும் சொல்லும் சுமந்தேன் - உன் பகைவர்களாகிய கைகேயி முதலியவர்கள் சொல்கின்றசொல்லையும் தாங்கினேன்; இரு தோள் எனச் சோம்பி ஏங்கும் கல்லும் சுமத்தேன்- (அப் பகைவர்களை அழிக்க முயலாது) இரண்டு தோள்எனப் பெயர்பெற்று வேலையின்றி ஓய்ந்து கிடக்கும் மலைகளையும் தாங்கியுள்ளேன்; கணைப் புட்டிலும், கட்டு அமைந்த வில்லும் -அம்பு அறாத் தூணியும், நன்கு கட்டிச் செய்யப்பெற்ற வில்லும் ஆகியவற்றையும்; சுமக்கப்பிறந்தேன் - பயனின்றித் தூக்கிக்கொண்டு கிடக்கப் பிறவி எடுத்தேன் (இத்தகைய துர்ப்பாக்கியனாகிய யான்); வெகுண்டு என்னை?’ - கோபிப்பதால் என்ன பயன்;’ என்றான் -. |