பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 263

     ‘தெவ்வர் சொல்லும் சொல்லும் சுமந்தேன்’  என்பதற்கு இதுவரை
பகைவர்களால் புகழப்படும் சொல்லைச் சுமந்தனோகிய யான் என்று
இலக்குவன் கூறியதாகப்பொருள் கோடலும் உண்டு. ஆயினும்,  இங்கே
இலக்குவன் கூற்றில் வரும்  மூன்றும் சினத்தாற்பயனில்லை என்கிற
அவலநிலையில் கூறுவதாக ஒரு தொடராகப் பொருள் கோடலே சிறப்பாதல்
கூர்ந்து  அறிக. ‘சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை,
இகல்வெல்லல்  யார்க்கும்அரிது’  வெகுண்டு என்னை?’ என்றான்.     135

இராமன் வெறுப்புரை  

1741.‘நன் சொற்கள் தந்து ஆண்டு, எனை
     நாளும் வளர்த்த தாதை
தன் சொல் கடந்து, எற்கு
     அரசு ஆள்வது தக்கது அன்றால்;
என் சொல் கடந்தால், உனக்கு
     யாது உளது ஊற்றம்?’ என்றான் -
தேன்சொல் கடந்தான்,
     வடசொல் - கலைக்கு எல்லை தேர்ந்தான்.

     தென்சொல் கடந்தான் - தமிழ் மொழியின் எல்லை கண்டவனாம்;
வடசொல்கலைக்கு எல்லை தேர்ந்தான் - வடமொழிச் சாத்திரங்களின்
முடிவிடத்தை ஆராய்ந்து அறிந்தவனும் ஆகிய இராமன் (இலக்குணனை
நோக்கி); ‘நன் சொற்கள் தந்து ஆண்டு எனை நாளும்வளர்த்த தாதை
தன்
- இன் மொழிகள் பேசி என்னைப் பாதுகாத்து  என்னை நாளும்
வளர்த்துவந்த தந்தை தயரதனது; சொல் கடந்து - சொற்களை மீறி; அரசு
ஆள்வது
- அரசு ஆட்சி  செய்வது  என்பது;  எற்கு - எனக்கு;  தக்கது
அன்று
- தகுதியானசெயல் அன்று; (ஆனால் உனக்கோ) என் சொல்
கடந்தால்
- (நீ தந்தையும் தாயும் என்றகருதும் ) என்னுடைய சொல்லை
மீறினால்; யாது உளது ஊற்றம்?’ -  என்ன நன்மைவந்துவிடும் (ஒன்றும்
வராது); என்றான் -

     ‘என்னைத் தந்தையும்  தாயும்  என்று  நீ கருதுவது உண்மையாயின்
என் சொல்லை மீறுவது  உனக்கும் தகாது’ என்று கூறுவதாகக் கருத்துக்
கொள்ளல் வேண்டும். ‘ஆல்’அசை.                             136

இலக்குவன் சீற்றம் தணிதல்  

1742.சீற்றம் துறந்தான்; எதிர்நின்று
     தெரிந்து செப்பும்