| | மாற்றம் துறந்தான்; மறை நான்கு என வாங்கல் செல்லா நால் தெண் திரை வேலையின், நம்பி தன் ஆணையாலே, ஏற்றம் தொடங்காக் கடலின், தணிவு எய்தி நின்றான். |
(இலக்குவன்) மறை நான்கு என வாங்கள் செல்லா நால் தெண்திரை வேலையின் நம்பிதன்ஆணையால் - வேதங்கள் நான்கு என்று என்றும் குறைவுபடாத நான்கு கடல்களை உடைய ஆடவர் திலகமாகிய இராமனது கட்டளையால்; சீற்றம் துறந்தான் - சினத்தைக் கைவிட்டான்; எதிர் நின்று - (இராமன் ) எதிரில் இருந்து; தெரிந்து - ஆராய்ந்து; செப்பும் - கூறுகின்ற; மாற்றம் - (தர்க்கவாத) வார்த்தைகளை; துறந்தான் - கைவிட்டான்; ஏற்றம் தொடங்காக் கடலின் - கரையைக் கடவாத கடல் போல; தணிவு எய்தி நின்றான்- (சினம்) அடங்கி நின்றான். ‘என்றும் வற்றாத நாற்பெருங் கடல் போன்ற நான்கு வேதங்களை உடைய நம்பி’ எனஇயைக்க, சீற்றத் தணிவுக்குக் கடல் உவமை. அலை ஓயாது; ஆயினும் கட்டுக்குள் நிற்கும்.இலக்குவன் உணர்ச்சி ஓயாது; ஆயினும், இராமபிரானின் சொல்லுக்குக்கட்டுப்பட்டான். 137 இராமனும் இலக்குவனும் சுமித்திரை கோயில் சேர்தல் | 1743. | அன்னான்தனை, ஐயனும், ஆதியொடு அந்தம் ஒன்றாம் தன்னாலும் அளப்ப அருந் தானும், தன் பாங்கர் நின்ற பொன் மான் உரியானும் தழீஇ எனப் புல்லி, பின்னை, சொல் மாண்புடை அன்னை சுமித்திரை கோயில் புக்கான். |
ஐயனும் - இராமனும்; ஆதியொடு அந்தம் ஒன்றாம் தன்னாலும் அளப்ப அருந் தானும் - முதலும் முடிவும் ஒன்றாக உள்ள தன்னாலும் வரையறுத்துக் கூறமுடியாதுள்ள திருமாலாகிய தானும்; தன் பாங்கர் ***பொன்னிறமான மான் தோலை உடைய சிவபிரானும்; தழீஇ என - தழுவிக் கொண்டாற் போல; அன்னான் தனை - அந்த இலக்கு |