பக்கம் எண் :

266அயோத்தியா காண்டம்

     தண்டா வனம் - எனப் பிரிக்காது  ஒன்றாக்கித் தண்டகாரணியம்
என்பதாகவும்உரைக்கலாம். சுமித்திரை இந்நிலையில் குறிப்பிட்டு ஓர்
இடத்தைச் சுட்டுவது  பொருத்தமாய்இராது  என்பதால் தண்டா வனம்
என்பதாகப் பிரித்துப் பொருள் உரைக்கப் பெற்றது.தண்டகாரணியம் என்பது
விந்திய மலைக்கும் சைவல மலைக்கும் இடையில் உள்ள காடு.      139

1745. சோர்வாளை, ஓடித் தொழுது
     ஏந்தினன்; துன்பம் என்னும்
ஈர் வாளை வாங்கி, மனம்
     தேறுதற்கு ஏற்ற செய்வான்;
‘போர் வாள் அரசர்க்கு இறை
     பொய்த்தனன் ஆக்ககில்லேன்;
கார்வான்நெடுங் கான் இறை
     கண்டு, இஙன் மீள்வென்’ என்றான்.

     சோர்வாளை - தளர்கின்ற சுமித்திரையை; தொழுது - (இராமன்) மத
வணங்கி ஓடி ஏந்தினன் - விரைந்து சென்று தாங்கிக்கொண்டான்; துன்பம்
என்னும் ஈர்வாளை வாங்கி
- (அவளது) துயர் என்கிற மனத்தை
அறுக்கும் வாளை வெளியே எடுத்து;  மனம்தேறுதற்கு - மனம்
தெளிவடைவதற்கு;  ஏற்ற செய்வான் - தக்க செயல்களைச்செய்பவனாய்;
‘போர் வாள் அரசர்க்கு இறை - போர் செய்வதில் வல்லவாளை
உடையசக்கரவர்த்தியை;  பொய்த்தனன் ஆக்ககில்லேன் - சத்தியம்
தவறியவனாகச் செய்யமுடியாதவனாய் உள்ளேன்; கார்வான் நெடுங்கானம்-
கரிய மேகம் சூழ்ந்த பெரியகாட்டை; இறைகண்டு - சிறிது பார்த்துவிட்டு;
இஙன் மீள்வென்’ -இவ்விடத்தே திரும்புவேன்;  என்றான் -.

     ‘இறை’ என்பது  சிறிது நேரம் என்பதாம். அவள் மனம் தேறச்
சொல்கின்றான் ஆதலின் 14 ஆண்டுகளை ‘இறை’ எனக் கூறினான். இஙன்-
இங்ஙன் என்பதன்விகாரம்.                                   140

1746.‘கான் புக்கிடினும்,
     கடல் புக்கிடினும், கலிப் பேர்
வான் புக்கிடினும்,
     எனக்கு அன்னவை மாண் அயோத்தி
யான் புக்கது ஒக்கும்; எனை
     யார் நலிகிற்கும் ஈட்டார்?
ஊன் புக்கு, உயிர் புக்கு,
     உணர் புக்கு, உலையற்க!’ என்றான்.

     (அம்மா!) ‘கான் புக்கிடினும் - காட்டில் சென்றாலும்;  கடல்
புக்கிடினும்
- கடலிற் சென்றாலும்;  கலிப் பேர் வான் புக்கிடினும் -