ஆரவாரத்தையும் பெருமையையும் உடைய தேவலோகத்தை அடைந்தாலும்; எனக்கு -; அன்னவை- அந்த இடங்கள்; யான் மாண் அயோத்தி புக்கது ஒக்கும் - யான் சிறந்தஅயோத்தி நகரத்துக்குள் இருப்பதைப் போலவே ஆகும்; எனை நலிகிற்கும் ஈட்டார் யார்?- என்னைத் துன்புறுத்தும் ஆற்றல் உடையவர் யார் உளர்; ஊன்புக்கு, உயிர்புக்கு, உணர்புக்கு உலையற்க’ - உடம்பு, உயிர், உணர்வு ஆகியவற்றுக்குள் (துயரம்) ஊடுருவித்தளரா தொழிக; என்றான் -. எந்நிலையில் இருந்தாலும் ஒரே தன்மையான மனம் உடையவன் ஆதலால் எல்லாம் எனக்குஅயோத்தியே என்றான். இத்தகைய சுத்த சாத்துவிக மனம் உடையானைத் துன்புறுத்த வல்லார்யார்? ஆகவே, மனம் தளராதீர்கள் என்று சுமித்திரையைக் தேற்றினான். உணர்பு உக்கு எனப் பிரித்து உணர்வழிந்து என உரைப்பினும் அமையும். ‘ஊன் கெட்டு, உயிர் கெட்டு, உணர்வுகெட்டு, என் உள்ளமும் போய் நான் கெட்டவா பாடி’ என்ற (திருவா. திருத்தெள்.18.) மணிவாசகர் பாட்லில் இவ்வரிசை அமைதல் காண்க. 141 கைகேயி மரவுரி அனுப்புதல் | 1747. | தாய், ஆற்றுகிலாள்தனை, ஆற்றுகின்றார்கள் தம்பால், தீ ஆற்றுகிலார், தனிச் சிந்தையினின் செற்ற நோய் ஆற்றுகில்லார் உயிர் போல நுடங்கு இடையார் மாயாப் பழியாள் தர, வற்கலை ஏந்தி வந்தார். | ஆற்றுகிலாள் தாய்தனை - துயரத்தை ஆற்றமாட்டாதவளாய் உள்ள தாய் சுமித்திரையை;ஆற்றுகின்றார்கள் தம்பால் - தேற்றித் தெளிவிக்கின்ற அந்த இராமலக்குவர்கள் இடத்தில்; தீ ஆற்றுகிலார் - பிரிவுத் தீயை அணைக்கமாட்டார்; தனிச்சிந்தையினின்று செற்ற நோய் - துணையற்ற தனித்த மனத்திலிருந்து கொல்லுகின்ற வேதனையை ஆற்றுகில்லார் - ஆற்ற மாட்டாத; உயிர் போல நுடங்கு இடையார் - நுண்ணியதாகிய உயிர்போலத் துவளுகின்ற இடையை உடைய மகளிர்; மாயாப் பழியாள் தர -என்றும் அழியாத பழியை உடைய கைகேயியானவள் கொடுத்தனுப்ப; வற்கலை ஏந்தி வந்தார்- மரவுரியைச் சுமந்து வந்தார்கள். ஏவர் மகளிர் ஆயினும் அவரும் இராமன் பிரிவுத் துயரத்தால் துடிக்கின்றனர். அவர்கள்கையில் மரவுரி கொடுத்து அனுப்பினாள் கைகேயி என்பதாம். முன்பும் “கைகேசியும் கொடியகூனியும் அல்லாமல் கொடியார் பிறர் உளரோ” என்ற (1704.) படியாள் இவ்விருவர் தவிரமற்றவர் அனைவரும். துயரால் துடிக்கின்றவர்களே என்பது போந்தது. ‘ மாயாப் பழியாள்’ கைகேயி பின்பும் பரதன்’ மாயா வன்பழி தந்தீ்ர்’ (2177.) என்பது காண்க. |