பக்கம் எண் :

268அயோத்தியா காண்டம்

வன் கலை - வலிய ஆடை,  மாவுரி - ‘வற்கலா’ என்னும்  வடசொல்
வற்கலை  எனத்தமிழ்முடிபு  பெற்றது  எனலாம்.                   142

1748.கார் வானம் ஒப்பான்தனைக்
     காண்தொறும் காண்தொறும் போய்
நீர் ஆய் உக, கண்ணினும்
     நெஞ்சு அழிகின்ற நீரார்,
‘பேரா இடர்ப்பட்டு அயலார்
     உறு பீழை கண்டும்
தீரா மனத்தாள் தர,
     ‘வந்தன சீரம்’ என்றார்.

     கார் வானம் ஒப்பான்தனை - மழை மேகத்தை ஒத்த கருமையும்
தண்மையும் உடையஇராமனை; காண்தொறும் காண்தொறும் - பார்க்கப்
பார்க்க; கண்ணினும் போய் - பார்க்கின்ற கண்ணைக் காட்டிலும் போய்;
நீர் ஆய் உக - நீராகிச் சிந்த;  நெஞ்சு அழிகின்ற  நீரார் - மனம்
கெட்டு  வருந்துகின்ற  தன்மையுடைய ஏவல் மகளிர்(இராமனைப் பார்த்து)
‘பேரா இடர்ப்பட்டு - நீங்க முடியாத துன்பப் பட்டு;  அயலார்  உறு
பீழை கண்டும்
- அயலார்கள்  படுகின்ற துன்பத்தைக்  கண்டு வைத்தும்;
தீரா மன்த்தாள் - தன் கொள்கையிலிருந்து  நீங்காத மனம் உடைய
கைகேயி;  தர -கொடுத்தனுப்ப;  வந்தன சீரம் - வந்தனவாகிய  மரவுரி 
இவை;  என்றார் -

     நேரில்  இராமனைக் காணும்போது  மேலும் நெஞ்சு புண்ணாகிறது
அச்சேடியர்களுக்கு. சேடியரது உள்ளத் துயர் இப்பாடலில்ல தெள்ளத்
தெளிவு ஆகும்.                                             143

இலக்குவன் மரவுரியை ஏற்றுத் தாயைப் பணிதல்  

1749.வாள் நித்தில வெண் நகையார் தர,
     வள்ளல் தம்பி,
‘யாணர்த் திருநாடு இழப்பித்தவர்
     ஈந்த எல்லாம்
பூணப் பிறந்தானும் நின்றான்;
     அவை போர் விலோடும்
காணப் பிறந்தேனும் நின்றேன்;
     அவை காட்டும் ’ என்றான்.

     வாள் நித்தில வெண் நகையார் தர- ஒளியுடைய முத்துப் போலும்
வெள்ளிய பற்களை உடையாராய  ஏவல் மகளிர் கொடுக்க;  வள்ளல் -
இராமன் தம்பியாயஇலக்குவன்; ‘யாணர்த் திருநாடு இழப்பித்தவர் -
புதிய வருவாய்களைச் சிறந்த கோசல நாட்டை